கேட்குற 'பணத்த' குடுக்கலன்னா... உன்னோட அந்த 'வீடியோ' எல்லாம் 'ரிலீஸ்' பண்ணிடுவேன்... கணவனே மனைவியை 'மிரட்டிய' கொடுமை!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Mar 20, 2020 10:48 AM

ரூபாய் 20 லட்சம் பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாச வீடியோக்களை வெளியிட்டு விடுவதாக, கணவனே மனைவியை மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Husband demanded money for his Wife, near Bangalore

பெங்களூர் கிரிநகர் பகுதியை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர் 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். முதல் கணவரை பிரிந்த அவர் தனியார் நிறுவனமொன்றில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். தனியாக வாழ்ந்த அந்த பெண்ணுக்கும் மதன் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணமான புதிதில் இருவரும் சந்தோஷமாகவே குடும்பம் நடத்தி இருக்கின்றனர்.

இதற்கிடையில் மதனின் குடும்பத்தினருக்கு இந்த விவகாரம் தெரியவர அவர்கள் வேறு ஒரு பெண்ணை மதனுக்கு திருமணம் செய்து வைக்க திட்டமிட்டனர். இதற்கு மதனும் சம்மதம் தெரிவித்ததாக தெரிகிறது. இந்துஜா விவகாரம் தெரிய வரவும் மதனுடன் அவர் சண்டை போட்டுள்ளார். இதனால்  ஆத்திரமடைந்த மதன் 20 லட்ச ரூபாய் பணம் கேட்டு அப்பெண்ணை மிரட்டியுள்ளார். மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் ஆபாச வீடியோக்கள், புகைப்படங்கள் ஆகியவற்றை வெளியிட்டு விடுவேன் என்று கடந்த சில நாட்களாக மதன் பிளாக்மெயில் செய்துள்ளார்.

மேலும் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் அப்பெண்ணுக்கு மதன் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து பெங்களூர் கிரிநகர் போலீசில் அப்பெண் மதன் மீது புகார் அளித்துள்ளார். தற்போது போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.