நம்மள போய் இப்டி 'தப்பா' நெனைச்சுட்டாங்களே... 'மனமுடைந்து' 8 வயது மகளுடன் 'விபரீத' முடிவெடுத்த தாய்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 17, 2020 02:18 PM

திருட்டு வழக்கில் போலீசார் விசாரித்ததால் மனமுடைந்த தாய் 8 வயது மகளுடன் விஷமருந்தி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Mothe and Daughter Suicide near Tirunelveli, Police Investigate

நெல்லை மாவட்டம் வல்லவன்கோட்டை பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி வள்ளியம்மாள்(35) மகள் மகராசி(8) இவர் அந்த பகுதியில் 3-ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் அந்த பகுதியில் உள்ள வீடு ஒன்றில் திருட்டு நடந்துள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் வள்ளியம்மாள் மற்றும் மகராசி இருவரையும் போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவத்தால் மனமுடைந்த வள்ளியம்மாள் நள்ளிரவில் வீட்டில் இருந்த பூச்சிமருந்தை எடுத்து உணவில் கலந்து சாப்பிட்டு விட்டு, தானும் சாப்பிட்டு படுத்து விட்டார். தொடர்ந்து இன்று அதிகாலை அவர்கள் இருவரும் உயிருக்கு போராடியதை பார்த்த உறவினர்கள் இருவரையும் மீட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனை செல்லும் வழியிலேயே மகராசி இறந்துவிட, சிகிச்சை பலனின்றி வள்ளியம்மாளும் இன்று காலை இறந்து விட்டார்.

இதையடுத்து இருவரது உடல்களும் தற்போது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைப்பட்டுள்ளது. இதற்கிடையில் இருவரது மரணத்திற்கு காரணமாக இருந்த போலீசார் மீது நடவடிக்கை எடுக்கும்படி அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.