குடித்துவிட்டு 'சண்டை' போட்ட கணவர்... இரண்டு 'குழந்தைகளுடன்' மனைவி எடுத்த 'விபரீத' முடிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Mar 19, 2020 12:55 AM

கணவர் குடித்துவிட்டு தகராறு செய்ததால், இரண்டு குழந்தைகளுடன் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Women Suicide with Two Daughters, Police Investigate

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பகுதியை சேர்ந்தவர் பார்த்தசாரதி. தச்சுத்தொழில் செய்து வரும் இவருக்கு வசந்தி (36) என்ற மனைவியும் 12, 10 வயதுகளில் இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். பார்த்தசாரதிக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையும் இதேபோல கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வசந்தி தன்னுடைய குழந்தைகள் இருவரையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு வெளியே சென்றுள்ளார். தொடர்ந்து குழந்தைகளுடன் அங்கிருந்த கிணறு ஒன்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி உள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. 

Tags : #POLICE