'குளிக்க' சென்ற வாலிபரை... கொடூரமான முறையில் 'கடித்து' கொன்ற முதலை... முக்கிய 'பாகங்கள்' மிஸ் ஆனதால் 'குடும்பத்தினர்' கடும் அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆற்றுக்கு குளிக்க சென்ற வாலிபரை முதலை கடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

கர்நாடகா மாநிலம் பல்லாரி மாவட்டம் சிறுகுப்பா பகுதியை சேர்ந்தவர் ரஹமத் அலி(30). இவர் நேற்று காலை அருகில் இருந்த துங்கபத்ரா ஆற்றுக்கு குளிக்க சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் ஆற்றுப்பகுதிக்கு சென்று தேடினர்.
அப்போது ஆற்றில் ரஹமத் அலியின் உடல் மிதந்து கொண்டிருந்தது. அவரது உடல் கொடூரமான முறையில் கடித்து குதறப்பட்டு இருந்தது. மேலும் அவர் உடலில் சில பாகங்களும் காணவில்லை. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் காவல் நிலையத்துக்கு இதுகுறித்து தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு தீயணைப்பு துறையினர் உடன் காவல் துறையினர் விரைந்து வந்தனர்.
ரஹமத்தின் உடல் பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் முதலை ரஹமத் அலியின் உடலை கடித்து கொன்று, அவரது உடல் பாகங்களை தின்றது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் ஆழ்ந்துள்ளனர்.
