'டேய் தம்பி.. அய்யா நல்லாருக்கணும்.. BLESS பண்ணு'.. 'பூம் பூம்'.. மாட்டிடம் ஆசிபெற்ற அமைச்சர்.. வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 09, 2019 10:59 AM

தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் இணையத்தில் எப்போதும் ட்ரெண்டிங் செய்திகளை அள்ளித் தருபவர் எனலாம். 

jaykumar gets blessings from Tamil Traditional Cow

அந்த அளவுக்கு புதுமையாக ஏதேனும் செய்துகொண்டிருப்பவர். எதுவும் இல்லையென்றாலும் கூட அவருடைய இரண்டு வரி பேட்டிக்கு எப்போதும் இணையவாசிகள் மத்தியில் ஈர்ப்பு இருந்துகொண்டே இருக்கும். அப்படித்தான் தற்போது பூம் பூம் மாட்டிடம் ஆசிபெற்ற அவரது வீடியோ இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. 

பூம் பூம் மாட்டிடம் ஆசிபெற்ற கையோடு பேசிய அமைச்சர் ஜெயகுமார், "பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும் டும் மேளந்தட்டி சேதி சொன்னான்டி" என்கிற பாடல் அந்த காலத்தில் பிரபலமானது என்றும், பூம் பூம் என்று மாடு கலகலவென்ற சத்தத்தோடு தலையைசைப்பதும், பூம் பூம் மாட்டுக்காரரின் பேச்சும் தனக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் நமது பண்பாட்டுக் கூறுகளையும், பாரம்பரியமான அம்சங்களையும் நம்மிடையே பலரும் கேலி செய்வதாகவும் வருந்திய அமைச்சர், பூம் பூம் மாடு மற்றும் மாட்டுக்காரர்களை நாம் மறந்துவிடக் கூடாது என்றும் பேசியுள்ளார். 

Tags : #JAYAKUMAR #CHENNAI