‘சென்னை ECR ரோட்டில் விபத்துக்குள்ளான கார்’.. கல்யாணத்துக்கு சென்ற தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 08, 2019 06:50 PM

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கார் விபத்துக்குள்ளானதில் கணவன், மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Couple died car accident in ECR road in Chennai

சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் தமிழ்மாறன்-சுவேதா தம்பதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மாமல்லப்புரத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக குடும்பத்துடன் காரில் சென்றுள்ளனர். கிழக்கு கடற்கரை சாலையில் கார் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக இருந்த ஜெனரேட்டர் வாகனத்தின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் காரில் பயணித்த தமிழ்மாறன்-சுவாதி தம்பதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் விபத்தில் காயமடைந்த இரண்டு குழந்தைகள் உட்பட் 5 பேரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள சென்ற வழியில் கார் விபத்துக்குள்ளாகி கணவன் மற்றும் மனைவி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CHENNAI #CARACCIDENT #COUPLEDIED #ECR