'கஸ்டமர்டா!'... 'திடீர்னு அடிச்ச ஷாக்'.. லேப்டாப் நிறுவனத்துக்கு யூஸர் வைத்த ஆப்பு.. சென்னை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Oct 09, 2019 04:25 PM

சென்னை பூந்தமல்லி அருகே வசித்து வந்தவர் ராபியா. இவர்  உயபயோகித்த லேப்டாப் ஷாக் அடித்ததை அடுத்து, அளித்த புகார் தற்போது நீதிமன்றத்தை அடைந்ததையொட்டி பரபரப்பான தீர்ப்பு அளிக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

chennai laptop company fined by court, due to user complaint

ராபியா கடந்த 2013-ஆம் ஆண்டு பிரபல தனியார் நிறுவனத்தின் லேப்டாப் விளம்பரத்தைப் பார்த்து பிடித்துப் போய் அந்த லேப்டாப்பினை 78 ஆயிரத்து 900 ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார். ஆனால் அதன் பிறகு லேப்டாப்பின் சார்ஜினை கனெக்ட் செய்து, உபயோகித்தபோது அந்த லேப்டாப் ஷாக் அடித்ததை ராபியா உணர்ந்துள்ளார்.

உடனடியாக இதுபற்றி கஸ்டமர் கேர் மற்றும் ஷோ ரூமில் கேட்க, அவர்கள் எவ்விதத்திலும் சரியாக ரெஸ்பான்ஸ் செய்யாததாகத் தெரிகிறது. இதனையடுத்து, நிறுவனத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட எலக்ட்ரிக்கல் என்ஜினியர் ஒருவரை ராபியா தொடர்பு கொண்டு பேச, அவரோ, லேப்டாப் மற்றும் சார்ஜரினை புகைப்படம் எடுத்து அனுப்ப சொல்லியிருக்கிறார்.

ஆனால் அந்த மெயிலுக்கும் ரிப்ளை வராததால் கடுப்பான ராபியா, சென்னை நுகர்வோர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி மோனி அமர்விற்கு விசாரணைக்கு வந்தபோது, லேப்டாப் உற்பத்தி செய்யப்பட்டதில் பிரச்சனை இருந்ததும், லேப்டாப் நிறுவனமும், டீலர் நிறுவனமாக இருந்த ஷோ ரூம் நிறுவனமும் இணைந்து 78 ஆயிரத்து 900 ரூபாய்க்கு லேப்டாப்பை ராபியாவுக்கு விற்றுள்ளதும் தெரிய வந்தது.

இதனால் லேப்டாப்பிப் விலை, மன உளைச்சலுக்கான இழப்பீட்டுத் தொகை மற்றும் வழக்கு செலவு என 15 ஆயிரம் ரூபாய் சேர்த்து, லேப்டாப் நிறுவனத்துக்கு மொத்தமாக 93 ஆயிரம் ரூபாய் அபராதத்தொகையை விதித்து சென்னை நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags : #CHENNAI #LAPTOP