‘பிரிந்து சென்ற மனைவி’... ‘உடல் நலம் பாதிக்கப்பட்ட தாய்’... 'மகன் எடுத்த விபரீத முடிவு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 09, 2019 08:00 PM

சென்னையில் தாயை கழுத்தறுத்து கொலை செய்த மகன், கத்தியால் தன்னை தானே குத்திக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

son stabs his own mother due to illness in chennai

பள்ளிக்கரணை சாய்கணேஷ் நகரை சேர்ந்தவர் எத்திராஜ். இவருடைய தாயார் சரஸ்வதி பக்கவாதம் காரணமாக நடக்கும் திறனை இழந்து இருந்துள்ளார். இவரை கவனித்து கொள்வது தொடர்பாக, எத்திராஜ் மற்றும் அவரது மனைவிக்கு இடையே பிரச்சனை இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக, கணவர் எத்திராஜை விட்டுவிட்டு, அவருடைய மனைவி பிரிந்து சென்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து எத்திராஜ் மனஉளைச்சலில், சற்று மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்ததாகத் தெரிகிறது. இந்நிலையில், தயார் சரஸ்வதியை கவனித்து வந்த எத்திராஜின் தந்தையும், சில நாட்களுக்கு முன்பு உயிரிழந்துவிட்டதாக தெரிகிறது. இதனால் தாயாரை கவனிக்க முடியாமல், எத்திராஜ் விரக்தியில் இருந்து வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில்தான், எத்திராஜ் அவரது தாயரை  கழுத்தறுத்துக் கொலை செய்துள்ளார். அதன்பின்பு, தன்னைத்தானே கத்தியால் குத்தி கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் எத்திராஜ். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில், சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #CHENNAI