எங்களுக்கு 'யார் காரணம்னு' தெரிஞ்சாகனும்... '62 நாடுகள்' சேர்ந்து சீனாவுக்கு எதிராக 'தீர்மானம்...' 'விசாரணையை சந்திக்குமா சீனா?...'
முகப்பு > செய்திகள் > உலகம்கொரோனா தொற்று பரவலுக்கு காரணம் யார்? என்று விசாரணை நடத்தும்படி இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் சார்பில் உலக சுகாதார அமைப்பில் இன்று தீர்மானம் கொண்டு வரப்படுகிறது.
கொரோனா போன்று, மீண்டும் ஒரு வைரஸ் பரவுவதைத் தடுக்க கொரோனா வைரஸ் எப்படி உருவானது என்று கண்டறிய வேண்டும் என ஆஸ்திரேலியா, கனடா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தி வந்தன.
இந்நிலையில், இதுதொடர்பாக பாகுபாடின்றி, சுதந்திரமாக , விரிவான விசாரணை நடத்தக் கோரி ஆஸ்திரேலிய மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகள் இணைந்து உலக சுகாதார அமைப்பில் தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளன.
இதற்கு இந்தியா, ஜப்பான், பிரிட்டன், பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனடிப்படையில், இன்று கூட உள்ள உலக சுகாதார அமைப்பின் 73-வது கூட்டத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக சுதந்திரமான விசாரணை கோரி தீர்மானம் கொண்டு வரப்பட உள்ளது.
இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால், சர்வதேச விசாரணையை சீனா எதிர்கொள்ளும் நிலை ஏற்படும்.