‘25 அடி' உயரத்தில் இருந்து விழுந்த ‘பேருந்து’... ‘நொடிப்பொழுதில்’ நடந்து முடிந்த ‘பயங்கர’ விபத்து...
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசாவில் பேருந்து ஒன்று 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர், 35 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒடிசா மாநிலம் காஷிப்பூரிலிருந்து பெர்ஹாம்பூருக்கு சென்றுகொண்டிருந்த பேருந்து ஒன்று இன்று அதிகாலை தப்தபாணி காட் என்ற பாலத்தின் அருகே 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இதுவரை 40 பேரை மீட்டுள்ளனர்.
இந்த பயங்கர விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர், 35 பேர் படுகாயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அதில் 12 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அதிகாலையில் இருந்த அடர்த்தியான பனிமூட்டம் காரணமாக விபத்து நிகழ்ந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : #ACCIDENT #ODISHA #BUS