'பெண் போலீஸார்தான் டார்கெட்!'.. 'வளைத்து வளைத்து போன் டார்ச்சர்'.. காவல்துறையை சுத்தலில் விட்ட நபர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Nov 26, 2019 03:50 PM
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர் ஜோஸ். 29 வயதான இவர் ஹோட்டலில் பணிபுரிந்து வந்துள்ளார். இவர்தான் கேரள பெண் காவலர்களை குறிவைத்து அவர்களின் செல்போன் நம்பர்களுக்கு மாற்றி மாற்றி போன் செய்து டார்ச்சர் கொடுத்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஒவ்வொரு காவல்துறையைச் சேர்ந்த பெண்ணிடமும் முடிந்தால் என்னை பிடியுங்கள் என சவால் விட்டுள்ளார். இவரை முதலில் சாதாரணமாக எடுத்துக்கொண்ட அந்த பெண்களும், அதன் பின்னர் போலீஸ் மேலதிகாரிகளிடம் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒட்டுமொத்த போலீஸாரும் ஜோஸை பிடிக்க களம் இறங்கினர்.
ஆனால் ஜோஸ் ஒவ்வொரு மகளிர் காவலரிடமும் மர்மமான முறையில் பேசி, சவால் விட்டுவிட்டு அந்த சிம் கார்டினை வேறொரு போனுக்கு மாற்றி, அனைவரையும் குழப்பி அடித்துள்ளார். எனினும் பொறுமையாக காத்திருந்த போலிஸார் ஜோஸின் அனைத்து போன் கால்களுமே எர்ணாகுளம்-திருவனந்தபுரம் பகுதிகளில் இருந்து மட்டுமே வந்ததை கண்டுபிடித்தனர்.
ஒருவழியாக ஜோஸைப் பிடித்து விசாரித்தபோது, அவர் திருவனந்தபுரம் அருகே உள்ள தும்பா பகுதியைச் சேர்ந்த புத்துவல் புராயில் ஜோஸ் என்றும் அவர் பெண் போலீஸரை டார்கெட் செய்து 3 மாதமாக போன் செய்து டார்ச்சர் செய்ததும் தெரியவந்ததை அடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஜோஸ் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.