‘சாலையில் உணவின்றி தவித்த முதியவர்’.. காரை நிறுத்தி ‘அமைச்சர்’ செய்த உதவி.. குவியும் பாராட்டுக்கள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சாலையில் உணவின்றி தவித்த முதியவருக்கு அமைச்சர் ஜெயக்குமார் உதவி சம்பவம் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது.

சென்னை துறைமுகம் பகுதியில் உள்ள காய்கறி கடைகளுக்கு சென்றுவிட்டு மீன்வளத்துறை அமைச்சர் தனது காரில் வீட்டிற்கு வந்துகொண்டு இருந்துள்ளார். அப்போது துறைமுகம் தொகுதி கிளைவ் பகுதி அருகே சுமார் 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் உணவின்றி சோர்வாக அமர்ந்திருந்ததை அமைச்சர் ஜெயக்குமார் பார்த்துள்ளார். உடனே காரை நிறுத்தச்சொன்ன அவர், காரில் இருந்து இறங்கி முதியவருக்கு மாஸ்க், உணவு, தண்ணீர் வழங்கி பயன்பாட்டிற்கு ஒரு சால்வையும் வழங்கினார்.
பின்னர் அவருக்கு செலவுக்கு பணம் கொடுத்துவிட்டு மாநகராட்சி அதிகாரிகளுக்கு முதியவர் குறித்த தகவலை தெரிவித்து, அவரை காப்பகத்தில் அனுமதிக்க உத்தரவிட்டார். இதனை அடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் முதியவர் பெயர் திருநாவுக்கரசு என்பதும், அவர் ஐசிஎஃப் பகுதியை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. முதியவருக்கு உதவிய அமைச்சர் ஜெயக்குமாருக்கு பலரும் தங்களை பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
