‘சென்னையில் கொரோனா பாதித்த 15 பேர் எந்தெந்த ஏரியாவில் வசிக்கிறார்கள்?’ வெளியானது பட்டியல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 30, 2020 12:05 AM

தமிழகத்தில் இதுவரைக்கும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ள நிலையில் சென்னையில் மட்டும் மொத்தம் 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக சென்னை பெருநகராட்சி தெரிவித்துள்ளது.  உலகை அச்சுறுத்தி வரும் இந்த வைரஸ்க்கு இதுவரை 6 லட்சத்து 77 ஆயிரத்து 938 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களும் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 319 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாகவும் 36 ஆயிரத்து 740 பேர் உயிரிழந்திருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

corona impacted cases in chennai area wise list released

இந்த எண்ணிக்கைகளில் நாளுக்கு நாள் மாற்றங்கள் இருந்து கொண்டே இருக்கும் சூழலில் தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணிக்கை 50-ஐத் தொட்டுள்ளது. இவர்களில் 2 பேர் குணம் அடைந்துள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  இந்த நிலையில் சென்னையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் வசிக்கும் பகுதிகளையும், பகுதிவாரியாக அவர்களின் எண்ணிக்கையையும் சென்னை பெருநகர மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி சென்னை அரும்பாக்கம், புரசைவாக்கம் உட்பட அண்ணாநகர் பகுதிக்குள் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, மேற்கு மாம்பலம் உட்பட கோடம்பாக்கம் பகுதிக்குள் 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், போரூர் உட்பட வளசரவாக்கம் பகுதிக்குள் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேனாம்பேட்டை, ஆலந்தூர் மற்றும் அடையாறு பகுதிகளில் தலா ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்

சென்னை பெருநகர மாநகராட்சி தகவல் வெளியிட்டுள்ளது.

Tags : #CORONA #CORONAVIRUS #CHENNAI #GREATERCHENNAI #CORONAUPDATE #CORONAUPDATES #CORONAVIRUSUPDATES