"நீ எங்களுக்கு ஒரே பையன்..." "கடன் வாங்கியாவது காசு அனுப்புறோம்..." "நீ அந்த வேலைக்குபோகாதப்பா..." 'உருகிய பெற்றோர்...' 'மறுத்த ஆம்புலன்ஸ் டிரைவர்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Mar 28, 2020 05:00 PM

கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில், ஆம்புலன்ஸ் டிரைவராக பணியாற்றி வரும் தங்களது மகனை வேலையை விட்டு வருமாறு உருக்கத்துடன் கூறும் பெற்றோரின் வேண்டுகோளை நிராகரித்து தனது பணியை தொடரும் இளைஞர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

108 Ambulance Driver Selfless Service in Corona Environment

ஸ்ரீவில்லிபுத்தூர் மேட்டு தெருவைச் சேர்ந்த தங்கவேல் என்பவரின் மகன் பாண்டித்துரை. இவர் கடந்த மூன்று வருடங்களாக சென்னை கே.கே.நகர் அசோக் பில்லர் பகுதியில் 108 வாகனம் ஓட்டி வருகிறார். இந்நிலையில், கொரோனா தொற்று பாதிப்புக்குள்ளானவர்களை இவர் ஆம்புலன்ஸ் வாயிலாக அழைத்து வந்ததாக தெரிகிறது.

இதனிடையே, தங்களது மகனுக்கு இந்த நோய் வந்து விடக்கூடாதே எனப் பதறிய பாண்டித்துரையின் பெற்றோர் தொலைப்பேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். பாண்டியின் தாய் பேசும் போது "பாண்டி இந்த வேலை உனக்கு வேண்டாம். நீ அவர்களை தொட்டுத் தூக்குவாயில்லையா. ஆகவே நீ தயவு செய்து சென்னையில் இருக்கும் உறவினர் வீட்டில் சென்று தங்கி விடு. அப்படி இல்லையென்றால் தயவு செய்து அவர்களிடம் எதுவும் சொல்லாமல் இங்கு வந்து விடு. உனக்கு என்னத் தேவையோ அதை கடன் வாங்கியாவது நான் செய்கிறேன்" என்கிறார்.

பாண்டித்துரையின் தந்தை பேசும் போது, "பாண்டி உனக்கு என்ன தேவையோ அதை பிச்சை எடுத்தாவது நிறைவேற்றி வைக்கிறேன். உனக்கு இந்த வேலை மட்டும் வேண்டாம்" என்கிறார். இதற்கு பதிலளித்துப் போசிய பாண்டி, "உங்களை மாதிரி எல்லோரும் அவரது மகன்களை அழைத்து விட்டால், யார் இந்த வேலையை செய்வார்கள்" எனக் கேட்கிறார்.

அதற்கு பதிலளித்த அவரது பெற்றோர்கள் "அவர்களை காப்பாற்ற நிறைய பேர் உள்ளனர். ஆனால் எங்களுக்கு நீ ஒருவன் தான் இருக்கிறாய்" என்று கதறுகின்றனர். ஆனாலும், துரை அவரை சமாதானம் செய்கிறார். இதனைக் கேட்ட அவரது பெற்றோர்கள் நீ கேட்கமாட்டாய் என்று உருக்கமாக பேசுகின்றனர். இவர்களது இந்த ஆடியோ உரையாடல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை கேட்ட அனைவரும் பாண்டித்துரையின் தன்னலமற்ற சேவையை நெஞ்சுருக பாராட்டி வருகின்றனர்.

Tags : #CORONA #CHENNAI #108 AMBULANCE #SERVICE #DRIVER