'அழ கூட முடியலியே'...'வரிசையாக வரும் சவப் பெட்டிகள்'...நொறுங்கி நிற்கும் அமெரிக்கா!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Mar 31, 2020 05:40 PM

உலகையே மிரட்டி வரும் கொரோனா, அமெரிக்காவைக் கதிகலங்க வைத்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் உயிர்ப் பலி அந்த நாட்டை அச்சத்தில் உறையச் செய்துள்ளது.

அமெரிக்காவை மிரட்டும் கொரோMore than 3,000 coronavirus deaths in the US

சீனாவைப் பாடாய்ப் படுத்திய கொரோனா தற்போது அமெரிக்காவை மிரட்டி வருகிறது. 199க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த நோய்க்கு 37 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே தற்போது அமெரிக்காவிலேயே கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகப் பதிவாகியுள்ளது.

நேற்று மட்டும் ஒரே நாளில் மட்டும் 12 ஆயிரத்து 478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 161,000ஐ கடந்துள்ளதாகச் சர்வதேச பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையே அமெரிக்காவில் பெரும் சோகமாக நேற்று மட்டும் ஒரே நாளில் 271 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் வைரஸ் தாக்குதலுக்கு அமெரிக்காவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆக 3003 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து உயர்ந்து வரும் வைரஸ் தொற்றின் எண்ணிக்கை மற்றும் உயிர்ப் பலியின் எண்ணிக்கை அமெரிக்காவை நொறுங்கிப் போகச் செய்துள்ளது. குடும்பத்தில் இறந்தவர்களின் இறுதிச் சடங்கில் கூட பங்கேற்க முடியாமல் பலரும் தவித்து வருவது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #CORONA #CORONAVIRUS #கொரோனா #US #அமெரிக்கா #சீனா