‘முட்டை, பால், பழரசம், சாத்துக்குடி ஜூஸ்’.. கொரோனா அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருபவர்களின் ‘மெனு லிஸ்ட்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Mar 26, 2020 12:07 PM

கொரோனா அறிகுறியுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு என்னென்ன உணவுகள் வழங்கப்படுகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Coronavirus patient food list at Rajiv Gandhi hospital

கொரோனா வைரஸ் அறிகுறியுடன் ராஜீவ்காந்தி மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு தன்மையை உண்டாக்கும் உணவை ஊட்டச்சத்து நிபுணர்கள் மருத்துவமனையில் தயாரித்து வழங்கி வருகின்றனர். அதன்படி காலை 7 மணிக்கு இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை வெந்நீரில் நன்றாக கொதிக்க வைத்து கொடுக்கப்படுகிறது.

காலை 8.30 மணியளவில் 2 இட்லி, சாம்பார், ஆனியன் சட்னி, சம்பா ரவை, கோதுமையால் ஆன உப்புமா, 2 வேக வைத்த முட்டை, பால், பழரசம் ஆகியவையும், காலை 11 மணிக்கு சாத்துக்குடி ஜூஸ், இஞ்சி மற்றும் தோலுடன் கூடிய எலுமிச்சையை கொதிக்க வைத்து சிறுது உப்பு சேர்த்து கொடுக்கப்படுகிறது.

பகல் 1 மணிக்கு 2 சப்பாத்தி, புதினா சாதம் 1 கப், வேகவைத்த காய்கறிகள், 1 கப் கீரை, பெப்பர் ரசம், உடைத்த கடலை 1 கப் ஆகியவை வழங்கப்படுகிறது. மாலை 3 மணிக்கு மிளகுடன் மஞ்சள் கலந்து காய்ச்சிய சுடு தண்ணீர் கொடுக்கப்படுகிறது. மாலை 4 மணிக்கு பருப்பு வகைகளில் மூக்கு கடலை சுண்டல் 1 கப் வழங்கப்படுகிறது.

இரவு 7 மணிக்கு 2 சப்பாத்தி, ஆனியன் சட்னி, இட்லி அல்ல்து சம்பா ரவா, கோது உப்புமா, 1 முட்டை உள்ளிட்டவை வழங்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். நோயாளிகளை கவனித்துக்கொள்ளும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவ பணியாளர்கள் அனைவருக்கும் முட்டை, பழரசம் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு மிக்க உணவுகள் தொடர்ந்து 3  வேளையும் வழங்கப்படுகிறது.

Tags : #CORONA #CORONAVIRUS #CHENNAI #MENULIST