காசிக்கு 'ஆன்மீக சுற்றுலா' சென்ற சென்னைவாசிகள் ... 'ஊரடங்கு உத்தரவால்' திரும்பிவர சிக்கல் ... மத்திய அரசுக்கு கோரிக்கை!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith | Mar 26, 2020 06:12 PM

காசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்ற 35 பக்தர்கள் ஊரடங்கு உத்தரவால் நேபால் பகுதியில் சிக்கியுள்ளனர்.

35 devotees from Chennai become helpless in Nepal due to lockdown

சென்னை கொருக்குப்பேட்டையில் இருந்து 35 பேர் 15 நாள் ஆன்மிக சுற்றுலாவாக காசி போன்ற பகுதிகளுக்கு சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இருந்து சில தினங்களுக்கு முன் கிளம்பி சென்றுள்ளனர். ஆன்மிக சுற்றுலா மேற்கொண்டவர்கள் அலகாபாத், அயோத்தி உள்ளிட்ட இடங்களுக்கு சென்ற பின்  இறுதியில் காசி சென்று விட்டு அங்கிருந்து சென்னை கிளம்ப திட்டமிட்டிருந்தனர்.

இந்நிலையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஏப்ரல் 14 ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும் என அறிவித்திருந்தார். இதனால் நேபாளியின் எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும் ரெயில்கள் இயக்கப்படவில்லை. சாலைகளும் மூடப்பட்டன.  ஊரடங்கு உத்தரவால் நேபாளத்தில் சிக்கி கொண்ட 35 பக்தர்களும் மிகுந்த அச்சம் கொண்டுள்ளனர். இந்நிலையில் தங்களை அங்கிருந்து மீட்டு சொந்த ஊருக்கு அழைத்து வர வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

35 பக்தர்களில் பல பேர் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : #KASI #CHENNAI #LOCKDOWN