‘முதியவர்கள் இருவர் உள்பட’... ‘3 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ்’... 'தமிழகத்தில் 38 ஆக அதிகரிப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 27, 2020 11:04 PM

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

TN health Department says 3 patients including chennai affected Corona

கொரோனா வைரஸ்  பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் 35 ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, மேலும் 3 பேருக்கு பாதித்ததை அடுத்து, 38 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த 73 வயது மூதாட்டிக்கும், இந்தோனேசிய நபருடன் தொடர்பில் இருந்த சேலத்தைச் சேர்ந்த 61 வயது முதியவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதேபோல், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த 39 வயது இளைஞருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதல்வர் பழனிச்சாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் முதல் நிலையில் (Stage-1) தான் உள்ளது. இது இரண்டாம் நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அதை கட்டுப்படுத்தி, முழுவதும் தடுப்பதற்காக, நாளை முதல் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக’ தெரிவித்துள்ளார்.

Tags : #CORONAVIRUS #CORONA #CHENNAI #ANNANAGAR #POSITIVE #CASES