'எப்படி எல்லாம் அபேஸ் பண்றாங்க'...'சிறுமியை மயக்க மாஸ்டர் பிளான்'...அலேக்காக பிடித்த போலீஸ்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Apr 06, 2019 12:38 PM

ஆண் வேடமிட்டு சிறுமியை மயக்கி நகைகளை திருடிய பெண்ணை,காவல்துறையினர் பொறி வைத்து பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Women cheated teenage girl in Erode has been arrested

ஈரோடு பகுதியை சேர்ந்த சிறுமி சுதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது).இவர் சமீபத்தில் உறவுக்காரர் ஒருவரின் வீட்டில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக சென்றிருந்தார்.அப்போது அங்கு வந்திருந்த விஷ்ணுபாலா என்ற இளைஞர் சுதாவிடம் அறிமுகம் ஆகியுள்ளார்.அவர் நான் உன்னுடைய உறவுக்காரர் தான் என கூறியுள்ளார்.இதனை நம்பிய சுதா அவரிடம் நட்பாக பழக ஆரம்பித்துள்ளார்.நாட்கள் செல்ல செல்ல இருவரும் நெருங்கி பழகிய நிலையில்,திடீரென ஒரு நாள் நான் உன்னை காதலிக்கிறேன் என சுதாவிடம்,அந்த இளைஞர் கூறியுள்ளார்.

இதனிடையே அந்த இளைஞரின் பேச்சில் மயங்கிய சுதா அவரின் காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஷ்ணுபாலா,அவ்வப்போது சுதாவின் வீட்டிற்கு யாரும் இல்லாத நேரத்தில் வருவதும், போவதுமாக இருந்துள்ளார்.இதனிடையே சுதாவின் வீட்டு பீரோவில் இருந்த 15 சவரன் நகைகள் மாயமானதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சுதாவிடம் அவர்களின் பெற்றோர்கள் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆண் நண்பருக்கு கொடுத்துவிட்டதாக சுதா கூறியுள்ளார்.

காவல்துறையில் புகார் அளித்தால் விஷயம் நிச்சயம் வெளியே தெரிந்து விடும் என்பதால் புகார் அளிக்காத சுதாவின் பெற்றோர், மறைமுகமாக விஷ்ணுபாலாவை கண்டுபிடிக்க முயற்சி செய்துள்ளனர்.ஆனால் அந்த இளைஞரை கண்டுபிடிக்க முடியவில்லை.இந்நிலையில் வீட்டில் இருந்த 3 சவரன் நகைகள் மீண்டும் காணாமல் போனது.அப்போது இளைஞர் விஷ்ணுபாலாவை தான் காதலிப்பதாகவும், அவர் மிகவும் பணத் தேவை இருப்பதாக கூறியதால் வீட்டிலிருந்த 3 சவரன் நகைகளை கொடுத்து அனுப்பியதாகவும் சுதா கூறியுள்ளார்.

அப்போது தன பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்த சுதாவின் பெற்றோர்,இதுகுறித்து காவல்நிலைத்தில் புகார் அளித்தனர்.உடனே களத்தில் இறங்கிய காவல்துறையினர்  விஷ்ணுபாவிற்கு சிறிது அளவு சந்தேகம் வந்தாலும்,அவன் தப்பிக்க வாய்ப்பிருப்பதால் அவனை பிடிக்க தகுந்த திட்டம் ஒன்றை வகுத்தனர். இதனையடுத்து சுதாவை செல்போன் மூலமாக விஷ்ணுபாலாவிடம் பேசவைத்த போலீசார், வீட்டில் தனியாக இருப்பதாகவும் அதனால் வீட்டிற்கு வருமாறும் கூறி அழைக்க வைத்தனர்.விஷ்ணுபாலாவும் சுதாவின் வீட்டிற்கு வந்தபோது, போலீசார் விஷ்ணுபாலாவை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

அப்போது அவனிடம் விசாரணை மேற்கொண்ட போது தான் காவல்துறையினருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.கைதானவர் ஆண் வேடமிட்ட பெண் என்பதும்,அவர் காங்கேயத்தை சேர்ந்த சரோஜா என்பதும் தெரிய வந்தது.பெண்கள் மீது கொண்ட ஈர்ப்பின் காரணமாக ஆண் வேடமிட்டு பெண்களை காதல் வலையில் வீழ்த்தியதும் தெரியவந்தது. சிறுமிகள் என்பதால் எளிதாக ஏமார்ந்து விடுவார்கள் என்பதால் சிறுமி சுதாவை ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது.சரோஜாவிடம் இருந்து நகைகளை கைப்பற்றிய காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags : #POLICE #WOMEN CHEATED #ERODE