இளைஞர் துண்டுத் துண்டாக வெட்டிப் படுகொலை.. ஈரோட்டில் பீகார் தம்பதி கைது..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Apr 10, 2019 04:01 PM

ஈரோடு அருகே பீகார் மாநிலத்தை சேர்ந்த இளைஞரை, அதே மாநிலத்தைச் சேர்ந்த தம்பதி துண்டு துண்டாக வெட்டி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

police arrest a couple from bihar for murder in erode district

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நிதீஷ் குமார் - சசி தம்பதியினர், ஈரோடு மாவட்டம் ராசாம்பாளையம் முத்துமாணிக்கம் நகரில் உள்ள வாடகை வீட்டில், கடந்த 7 மாதங்களாக தங்கியிருந்து சாய ஆலையில் கூலி வேலை செய்து வந்தனர். இவர்கள் அடிக்கடி தங்களது சொந்த ஊரான பீகார் செல்லும் போது ரயிலில் நவீன்குமார் என்ற இளைஞர் பழக்கமாகியுள்ளார். பின்னர் நவீன்குமார் அந்த தம்பதியுடன் ஈரோட்டில் தங்கி வேலை செய்து வந்தார்.

இந்நிலையில், நிதீஷ்குமார் - சசி தம்பதியினர் திடீரென, நவீன்குமாரின் பெற்றோரை தொலைபேசியில் தொடர்புகொண்டு, 2 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டல் விடுத்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த நவீன்குமாரின் பெற்றோர், பீகார் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.  இந்தப் புகாரின் பேரில் ஈரோடு வந்த பீகார் காவல் துறையினர், தமிழ்நாடு காவல் துறையுடன் இணைந்து விசாரணை நடத்தினர்.

அப்போது, நிதீஷ்குமாரின் வீட்டிற்குச் சென்று சோதனை செய்தபோது, கொடூரமான முறையில் நவீன்குமார் கொலை செய்யப்பட்டு, அவரது உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டநிலையில், சாக்குப்பையில் போட்டு கட்டி வைத்திருந்ததைப் போலீசார் கண்டுபிடித்தனர். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், நவீன்குமார் உடலைப் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பிவைத்தனர்.

நிதீஷ்குமார்-சசி தம்பதியை கைது செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இரண்டு லட்சம் ரூபாய் பணம் கேட்டு தராத காரணத்தால், நவீன்குமார் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்தக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #MURDER #ERODE #BIHAR #ARREST #ATTACK