'நா வந்துட்டேன்னு சொல்லு'.. 'நானா விளையாடுறேன்.. தானா விளையாடுது கை'.. வைரல் வீடியோ!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Siva Sankar | Jul 24, 2019 07:51 PM
மேற்கிந்தியத் திவுகள் அணிக்கு எதிராக இந்திய அணி டெஸ்ட் போட்டிகள், சர்வதேச போட்டிகள் மற்றும் டி20 போட்டிகளை விளையாடவுள்ளது.
இதற்கென இந்திய வீரர்கள் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஷிகர் தவான் இடம் பெற்றுள்ளார். முன்னதாக உலகக் கோப்பை போட்டியின்போது தனது கையில் ஏற்பட்ட காயம் காரணமாக, பாதித் தொடரில் வெளியேறியிருந்தார். அதன் பிறகு ஷிகர் தவான், அடுத்தடுத்த போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ள ஷிகர் தவான், அந்த அணியுடன் மோதவுள்ள போட்டிக்காக, கடுமையாக வலைப்பயிற்சி மேற்கொள்ளும் வீடியோவை, அவர் தன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதை அடுத்து இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் அவர், ‘தன்னை மீறி அனிச்சையாகவே’ விளையாடுவதாகக் குறிப்பிட்டு கேப்ஷன் பதிவிட்டுள்ளார்.