‘போதை தலைக்கேறினதும்..’ கல்லால் அடிச்சு.. ‘ஆண் நண்பருடன்’ சேர்ந்து.. மனைவி செய்த கொடூரம்..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Aug 09, 2019 11:29 AM

கிருஷ்ணகிரி அருகே கணவரைக் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய மனைவியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

Man murdered by 2nd wife and her lover in Krishnagiri

கிருஷ்ணகிரி  மாவட்டத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் என்பவர் முதல் மனைவி பிரிந்து சென்றுவிட்ட நிலையில் மீண்டும் திருமணம் செய்துகொண்டு இரண்டாவது மனைவி விஜயம்மாவுடன் வசித்து வந்துள்ளார். இவர்கள் இருவருக்கும் குழந்தை இல்லாத நிலையில் ஈஸ்வரன் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் ஈஸ்வரன் அதே பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்ற இளைஞருக்கு 5 லட்சம் ரூபாயைக் கடனாகக் கொடுத்துள்ளார். இதுதொடர்பாக சத்தியமூர்த்தியை அடிக்கடி சந்தித்ததில் விஜயம்மாவுக்கு அவருடன் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது தகாத உறவாக மாறியதாக கூறப்படுகிறது.

இதுபற்றி ஈஸ்வரனுக்கு தெரிய வர அவர் சத்தியமூர்த்தியிடம் கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டுள்ளார். மேலும் மதுபோதையில் மனைவியையும் துன்புறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும் அவரைக் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளனர். பின்னர் கடந்த 20ஆம் தேதி சத்தியமூர்த்தி பணம் தருவதாக ஈஸ்வரனை அழைத்துச் சென்று அவருக்கு மது வாங்கிக் கொடுத்துள்ளார். அவருக்கு போதை தலைக்கேறியதும் சத்தியமூர்த்தியும், விஜயம்மாவும் சேர்ந்து அவரைக் கல்லால் அடித்துக் கொலை செய்துள்ளனர். மேலும் அடையாளம் தெரியாமல் இருக்க ஈஸ்வரனின் முகத்தை சிதைத்து, தார்ப்பாயில் உடலை வைத்துக் கட்டி ஆந்திர மாநில வனப்பகுதியில் கொண்டுபோய் வீசியுள்ளனர்.

அதற்கு பிறகு எதுவும் தெரியாததுபோல இருவரும் ஊர் திரும்பியுள்ளனர். பின்னர் ஈஸ்வரனைக் காணவில்லை என உறவினர்களுடன் சேர்ந்து விஜயம்மாவும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் வனப்பகுதியில் வீசப்பட்ட உடலை மீட்ட ஆந்திர மாநில போலீஸார் அது ஈஸ்வரன் தான் என்பதை உறுதி செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து விஜயம்மாவிடம் நடத்திய விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாகவே பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகமடந்த போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியதில் சத்தியமூர்த்தியோடு சேர்ந்து ஈஸ்வரனைக் கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். இதையடுத்து இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags : #KRISHNAGIRI #HUSBAND #WIFE #BRUTAL #MURDER #LOVE #AFFAIR #DRUNKEN