'மணமாகி 30 நாளில் கணவரை தீர்த்துகட்டிய நர்ஸ்'.. 3 வருடம் கழித்து .. 'மர்ம மரணம்'.. தமிழகத்தை உலுக்கிய சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 12, 2019 02:20 PM

திருச்சி பொன்மலைப்பட்டி அருகே உள்ள மேல்கல்கண்டார்கோட்டை. இப்பகுதியில் வசித்துவந்த 27 வயது இளம் பெண் அஜிதா, அண்மையில் தன் வீட்டு அறையில் இறந்து கிடந்துள்ளார்.

woman dead after killed her husband 3 yrs before with lover

ஆனால் அவரின் அருகில் விஷ மாத்திரையும், அந்த அறையின் மின் விசிறி கம்பிகளில் தூக்குப் போடுவதற்கான சேலையும் தொங்கிக் கொண்டிருந்துள்ளது. தூக்கு போட்டு தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த அஜிதா, பின்னர் மனம் மாறி விஷ மாத்திரைகள உட்கொண்டிருக்கலாம் என்கிற சந்தேகத்தில் விசாரணை தொடங்கப்பட்டது. அப்போதுதான் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்தன.

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் கிராமத்தைச் சேர்ந்த அஜிதா, சென்னை கேளம்பாக்கத்தில் நர்ஸாக பணிபுரிந்தபோது, சக ஊழியரான ஜான் பிரின்ஸஸ் என்பவரை காதலித்துள்ளார். ஆனால் அஜிதாவின் பெற்றோர்கள் அவரின் காதலுக்கு சம்மதிக்காமல், குமரி மாவட்டம் கல்லுவிளை மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகன்பாபுவுக்கு 2018, ஜூன் 8-ஆம் தேதி கட்டாயமாகத் திருமணம் செய்து வைத்தனர். அதன் பிறகு ஜெகன் பாபு சிங்கப்பூர் செல்ல, மீண்டும் பணிநிமித்தமாக சென்னை சென்ற அஜிதா காதலன் ஜான் பிரின்சஸை சந்தித்து, தன் கணவருடன் வாழ விருப்பமில்லாமல்தான் திருமணம் செய்துகொண்டதாகக் கூறியுள்ளார்.

இருவரும் சேர்ந்து ஜெகன் பாபுவைத் தீர்த்துகட்ட திட்டம் தீட்டினர். அதன்படி 2016-ஆம் ஆண்டு, ஜூலை 7-ஆம் தேதி மீண்டும் கன்னியாகுமரி வந்த ஜெகன் பாபுவை நண்பர்கள் பார்ட்டிக்காக அஜிதா சென்னை அழைக்க, அவர் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸில் வந்துள்ளார். அதே ரயிலில், அஜிதா பணிபுரியும் ஹாஸ்பிடலின் மருத்துவர் என பொய் சொல்லி, ஜான் பிரின்சஸூம் ஏறி, திருச்சி ஜங்ஷனுக்கு முன்னதாக உள்ள முடுக்குப்பட்டியில் அவரை இறக்கி காரில் செல்லலாம் என அழைத்துச் சென்று தீர்த்து கட்டியுள்ளார்.

இதை மறைக்க அவரின் உடலை தண்டவாளத்தில் போட்டுவிட்டு ஜான் தப்பியுள்ளார். அவ்வழியே வந்த ரயில் மெதுவாகியுள்ளது. என்ஜினை இயக்குபவர் தண்டவாளத்தில் ஜெகனின் பிரேதம் இருப்பதை பார்த்துவிட்டார். அவர் இந்த தகவலை போலீஸிடம் கூறியுள்ளார்.  அதன் பேரில் ஜான் பிரின்சஸூம் அஜிதாவுக் கைது செய்யப்பட்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு மீண்டும் வெளிவந்தனர். அதன் பின், தற்போது இந்த வழக்கில் தொடர்ந்து ஆஜராக வேண்டியிருந்ததால், திருச்சியில் அறை எடுத்து தங்கியிருந்துள்ளார் அஜிதா.

திருமணம் ஆன 30 நாட்களில், காதலருடன் சேர்ந்து கணவரை தீர்த்துகட்டி சிறை சென்று ஜாமினில் வந்த அஜிதா, கணவர் இறந்து 3 ஆண்டுகளுக்கு பின் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் காவல் துறையையே உலுக்கிய வழக்காக மாறியுள்ளது.

Tags : #WOMAN #HUSBANDANDWIFE #MURDER #MYSTERY #POLICE