'நம்பி வந்தனே?'.. 'நெருக்கமான புகைப்படங்களை பேஸ்புக்கில்..' .. இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Aug 08, 2019 10:38 AM

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ளது மத்தூர். இங்குள்ள மலையாண்ட அள்ளி என்கிற ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி பெருமாள் என்பவரின் 22 வயது மகள் ப்ரீத்தா ஒரு இடை நிலை ஆசிரியை.

lover threatened using private pics, girl commits suicide

பி.எட்., படித்த இவர் அருகில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்துள்ளார். இவரும் அதே பகுதியைச் சேர்ந்த 27வயதான பிரபு செல்வம் என்பவரும் காதலித்து வந்துள்ளனர்.  இந்த காதல் விவகாரம் வீட்டிற்கு தெரிந்ததும், ப்ரீத்தாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். எனினும் தொடர்ந்து ப்ரீத்தா-பிரபு செல்வத்தின் காதல் தொடர்ந்துள்ளது. இதனிடையே தன்னைத் திருமணம் செய்துகொள்ளுமாறு வேண்டியுள்ளார். ஆனால், அவ்வாறு திருமணம் செய்ய வேண்டுமானால், 10 ஆயிரம் பணம் வேண்டும் என்று ப்ரீத்தாவிடம், பிரபு செல்வம் கேட்டு பெற்றுள்ளார். ஆனால் திருமணம் செய்துகொள்ளவில்லை. மேலும் இதுபோன்று பலமுறை பிரபு செல்வம் பணம் பெற்றதாகத் தெரிகிறது.

பிறகு ஒருநாள், ப்ரீத்தாவிடம் பணம் கேட்ட பிரபு செல்வத்திடம், ப்ரீத்தா பணம் தர முடியாது என்று மறுத்துள்ளார். இதனால் ப்ரீத்தாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரபுசெல்வம்,  ‘பணம் தரவில்லை என்றால், உன்னுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை எல்லாம் முகநூலில் போட்டுவிடுவேன்’ என்று கூறியுள்ளார். அப்போதுதான் பிரபுசெல்வத்தின் சுயரூபத்தை ப்ரீத்தா அறிந்துள்ளார். தவறான ஒருவரை காதலித்துவிட்டோம் என வருந்தியும், தவிர, தான் பணம் கொடுக்க போவதில்லை; ஆதலால் பிரபு செல்வம் எப்படியும் தன் புகைப்படங்களை முகநூலில் போட்டுவிடுவார் என்று பயந்தும், ப்ரீத்தா கடந்த 2-ஆம் தேதி வீட்டில், யாரும் இல்லாத நிலையில் தன்னைத்தானே மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திக்கொண்டார்.

ஆனால் அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு, பெற்றோரிடம் தகவல் கூறியதோடு, மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், சிகிச்சைப்பலனின்றி ப்ரீத்தா உயிரிழந்தார். பிரபு செல்வம் தேடப்பட்டு வருகிறார். 

Tags : #SUICIDEATTEMPT #KRISHNAGIRI #TEACHER #LOVE