‘கிரெடிட் கார்டு ஹோல்டர்களுக்கு மட்டும்’... ‘இன்று முதல்’... ‘பெட்ரோல் பங்கில் இந்த சலுகை இல்லை’!
முகப்பு > செய்திகள் > வணிகம்By Sangeetha | Oct 01, 2019 12:39 PM
கிரெடிட் கார்டு மூலம் பெட்ரோல் பங்கில் பண பரிவர்த்தனையை மேற்கொள்ளும் நபர்களுக்கு மட்டும் கேஷ்பேக் சலுகை இன்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையைக் கொண்டுவந்தது மத்திய அரசு. இதையடுத்து பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களுக்குப் பதிலாக, புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்தில் விடப்பட்டன. மேலும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டு, பொதுமக்கள் நன்மை பெறும் வகையில், வங்கிகள் பல்வேறு சலுகைகளை அளிக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டது.
அத்துடன், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், பாரத் பெட்ரோலியம், ஹிஸ்துஸ்தான் பெட்ரோலியம் போன்ற நிறுவனங்களை, பணப் புழக்கத்தின் குறைவால், டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 0.75 சதவிகிதம் கேஷ்பேக் சலுகை அளிக்க மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இதையடுத்து, கடந்த இரண்டரை வருடங்களாக, பெட்ரோல் பங்கில், டிஜிட்டல் பரிவர்த்தனை மேற்கொள்ளும் வாடிக்கையாளர்களுக்கு, 0.75 சதவிகிதம் கேஷ்பேக் கொடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் அந்த கேஷ்பேக், கிரெடிட் கார்டு மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளுபவர்களுக்கு மட்டும் நிறுத்தப்பட்டுள்ளது. டெபிட் கார்டு, மற்றும் மற்ற டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான சலுகைகள் தொடரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
