'கிஸ் பண்ணவா வர்ற?.. யாருகிட்ட?'.. தூக்கி வீசிய யானை.. இளைஞருக்கு நேர்ந்த சோகம்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Sangeetha | May 02, 2019 07:26 PM
திரைப்பட ஹீரோக்களால் கவரப்பட்டு யானைக்கு முத்தமிடச் சென்ற, இளைஞர் ஒருவரின் செயல் கடைசியில் விபரீதத்தில் முடிந்துள்ளது.
கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் மாலூர் வட்டத்திற்கு உட்பட்ட டி.என் டொட்டி என்ற கிராமத்திற்குள் யானைகள் கூட்டமாக வந்துள்ளன. இதைப் பார்த்த மக்கள், யானைகளுடன் செல்ஃபி எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் அதிகம் வருவதைக் கண்ட யானைகள் அங்கிருந்து செல்ல முடியாமல் திணறியுள்ளன. அந்த சமயத்தில் ராஜூ என்ற 24 வயது வாலிபர் தனது நண்பர்களிடம் கன்னடப் படத்தில் வரும் ஒரு ஹீரோ போன்று தான் யானைக்கு முத்தமிட உள்ளதாகக் கூறிவிட்டு, குடி போதையில் யானைகளின் அருகில் சென்றுள்ளார்.
ஏற்கனவே மனிதக் கூட்டத்தைப் பார்த்து பதற்றமாக இருந்த யானைகள், ராஜுவைத் தும்பிக்கையால் மரத்தின் மீது தூக்கிப்போட்டு மிதித்ததில், இரத்த வெள்ளத்தில் மிதந்துள்ளார். உடனே அங்கிருந்த வனத்துறையினர் அவரை யானைகளிடமிருந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
மயக்க நிலையில் உள்ள அந்த வாலிபருக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர், கடும் முயற்சி செய்து யானைகளை காட்டுக்குள் அனுப்பினர். மேலும் அங்குள்ள கிராமப்புற மக்களுக்கு யானை குறித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாகக் கர்நாடக வனத்துறை அதிகாரி தனலக்ஷ்மி தெரிவித்துள்ளார்.