'இனிமேல் ‘டிக்-டாக்’ல...'வசனம்,டான்ஸ்' எல்லாம் பண்ண முடியாது'...அதிரடி நடவடிக்கையில் ஐகோர்ட்டு!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Jeno | Apr 04, 2019 10:00 AM
இன்றைய இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்களிடையே பரவலாக பயன்படுத்தப்படும் செயலி தான்
'டிக்-டாக்'.இந்த செயலியில் ஒலிக்கும் சினிமா பாடல்கள் மற்றும் சினிமா வசனங்களுக்கு ஏற்றவாறு நாம் நடிக்கவோ அல்லது வசன உச்சரிப்போ செய்யலாம்.ஆனால் இந்த செயலியை பயன்படும் சிலர் அதில் வரம்பு மீறி நடந்து கொள்வதாகவும்,இரட்டை அர்த்த வசனங்களை அதிகம் பேசி நடிப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.
இதனிடையே இளைஞர்களையும் பள்ளி மாணவர்களையும் தவறான பாதைக்கு அழைத்து செல்லும் டிக்-டாக் செயலியை டிக்-டாக் செயலியை தடை செய்ய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல் எஸ்.முத்துக்குமார், மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.அவரது மனுவில் ''சீனாவில் இருந்து ‘டிக்-டாக்’ என்னும் செயலி 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 75 மொழிகளில் இந்த செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 2018-ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வில் 50 கோடிக்கும் அதிகமானவர்கள் ‘டிக்-டாக்’ செயலியை பயன்படுத்துவதாக தெரியவந்துள்ளது.
நமது நாட்டின் மிக பெரிய சக்தியாக விளங்குவது இளைஞர்கள் தான்.ஆனால் அவர்களை வளர்ச்சி பாதைக்கு செல்ல விடாமல் தடுத்து, திசை திருப்பும் நோக்கில் சீன நாட்டினர் ‘டிக்-டாக்’ செயலியை இந்தியாவில் பிரபலமாக்கி வருகிறார்கள்.மேலும் இந்த செயலியை பயன்படுத்தி மன அழுத்தத்திற்கு உள்ளாகி 400-க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.எனவே பல்வேறு வகையிலும் தீமையை தரும் டிக்-டாக் செயலிக்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்,என தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் 'தமிழகத்தில் குழந்தைகள், இளைஞர்களுக்கு எதிரான சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ளன. எனவே குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் சட்டத்தை நமது நாட்டிலும் ஏன் அமல்படுத்தக்கூடாது? என்று கேள்வி எழுப்பினர்.மேலும் டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய இந்தோனேஷியா, வங்காளதேசம் ஆகிய நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே நம் நாட்டில் டிக்-டாக் செயலியை பதிவிறக்கம் செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். டிக்-டாக் செயலியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோக்களை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பக் கூடாது. குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் இணையதள சட்டத்தை நம் நாட்டில் அமல்படுத்துவது குறித்து வருகிற 16-ந்தேதி மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.