இனி ‘இந்த வகையான ஷோ’ க்களை டிவி-யில் ஒளிபரப்ப தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 03, 2019 02:58 PM

சாலைகளில் செல்லும்போது, வீட்டுக்குள் இருக்கும்போதும் திடீரென முகமறியா நபர்கள் வந்து பலரிடம் பேசத் தொடங்குவார்கள். அவர்கள் பேசுவதையும் செய்வதையும் பார்த்தால் வியப்பாகவும் வித்தியாசமாகவும் இருக்கும். நடைமுறைக்கு அப்பாலும் அவர்களின் நடைமுறை இருக்கும்.

Madurai Branch HighCourt banes Prank shows in TV and medias

பல பி.பி. பார்ட்டிகள் டென்ஷனாகி அடிக்க கை ஓங்கிவிடுவார்கள். அந்த சமயத்தில்தான், அந்த நபர்கள் அடிக்க வருபவரின் கைகளை பிடித்துக்கொண்டு, அங்கே பாருங்கள் தூரமாக, கேமரா இருப்பது தெரிகிறதா? ஆம், நாங்கள் இன்ன தொலைக்காட்சிக்காக அல்லது இன்ன யூ-டியூப் சேனலுக்காக இந்த பிராங்க் ஷோவை செய்கிறோம் என்பார்கள்.

திடும்மென ஒரு நபரிடம் சென்று சம்மந்தமில்லாமல் அவர்களை உளவியல் ரீதியாக சீண்டுவதான் இந்த ஷோவின் சாராம்சம். அப்படிப்பட்ட பிராங்க் ஷோவால் அதிர்ச்சிகரமான சோக சம்பவங்கள் எல்லாம் கூட நிகழ்ந்துள்ளன. இதனால் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிமன்றம் இந்த பிராங்க் ஷோ எனப்படும் குறும்படங்களை எடுக்கவும், அவற்றை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பவும் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. முன்னதாக இந்த ஷோ யூ-டியூப்களில் ஒளிபரப்புவதற்கான தடை இருந்துவரும் நிலையில் உயர்நீதிமன்றம் இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மேலும் டிக்-டாக் போன்ற செயலிகள் பெண்கள் மற்றும் குழந்தைகளை மன ரீதியலான பாதிப்புக்குட்படுத்துவதாகவும், இவை போன்ற சமூக பாதிப்புகளை உண்டுபண்ணும் செயலிகளை எல்லாம் நீதிமன்றங்களுக்கு முன்னதாக அரசே தடை செய்ய வேண்டுமென்றும் மதுரை உயர் நீதிமன்ற கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டிக்-டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என்று மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார் தொடுத்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை நீதிபதிகள் கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தபோது இத்தகைய உத்தரவினை பிறப்பித்துள்ளனர்.

Tags : #TIKTOK #APP #MADURAI #HIGHCOURT #TNGOVT #PRANKSHOW #MEDIA #TV #YOUTUBE