என்ன கண்ணகி பிறந்தது மதுரையிலா? புது சிலப்பதிகார கதையை உருவாக்கிய ஸ்டாலின்! பிரச்சாரத்தில் நடந்த சுவாரஸ்யம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Arunachalam | Apr 02, 2019 08:22 PM

 

stalin funny speech about silapathikaram during his election campaign

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 18 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் அதற்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இதற்காக, அனைத்து தலைவர்களும் தொகுதி வாரியாக பிரச்சாரத்தில் பிசியாக இருக்கின்றனர். இந்நிலையில் மதுரையில் பிரச்சாரம் செய்த திமுக தலைவர் ஸ்டாலின் பல இடங்களில் உளறி கொட்டியுள்ளார். இவரது பேச்சு தற்போது வைரலாக பரவி வருகிறது.

அதில், சிலப்பதிகாரத்தில் உள்ள சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் என்ற வரியை "சான்றோரும் ஒன்றுகொல் சான்றோரும் உண்டுகொல் " என உளறியுள்ளார். மேலும், மதுரையில் பிறந்த கண்ணகி என குறிப்பிட்டார். ஆனால் சிலப்பதிகாரத்தில் கண்ணகி பூம்புகார் நகரில் பிறந்தார் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சிலப்பதிகாரத்தை படித்த மு க ஸ்டாலின் மதுரையில் நின்று கொண்டு மதுரையில் பிறந்த கண்ணகி என்று தப்பாக உளறிக்கொட்டிச் சென்றது பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.