டீ ஷர்ட்டில் அழகிரி.. ஸ்டாலினுடன் செல்ஃபி.. இளைஞர் செய்த வைரல் காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 29, 2019 11:09 AM

தி.மு.க. தலைவர் ஸ்டாலினுடன் மதுரையில் இளைஞர் ஒருவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

mk stalin selfie with youth goes viral on internet

மதுரை மக்களவைத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் சு. வெங்கடேசன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து மாட்டுத் தாவணி மார்க்கெட் பகுதியில், காலையில் நடந்து சென்ற ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். மார்க்கெட்டுக்கு வந்திருந்த மக்களை சந்தித்து வேட்பாளர் சு. வெங்கடேசனுக்கு ஆதரவு திரட்டினார்.

பின்னர் வணிகர்கள், பொதுமக்களிடம் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அங்கிருந்த தேநீர் கடை ஒன்றில் அமர்ந்து மக்களோடு மக்களாக டீ அருந்தினார். மு.க.ஸ்டாலினை பார்த்த இளைஞர்கள், சிறுவர்கள் என ஏராளமானோர் ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.  அதில் இளைஞர் ஒருவர் ஸ்டாலினுடன் எடுத்துக்கொண்ட  செல்ஃபி சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மு.க. அழகிரியின் படம் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிற டீ சர்ட் அணிந்திருந்த அந்த இளைஞர், மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். டீ சர்ட்டில் அழகிரி, ஸ்டாலினுடன் செல்ஃபி என கட்சித் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் இந்தப் புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து வருகின்றனர்.

Tags : #MK STALIN #SELFIE #MADURAI