பி.எம்.டபிள்யூ 'காரை' பரிசாகப்பெற்ற சிந்து.. சாவி கொடுத்து ஆசீர்வதித்த 'பிரபல' நடிகர்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Manjula | Sep 17, 2019 05:12 PM
உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கம் வென்ற பி.வி.சிந்துவுக்கு பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு தலைவர்கள்,நடிகர்-நடிகைகள்,விளையாட்டு வீரர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.இந்த வெற்றியின் மூலம் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்தியாவின் சார்பாக தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையும் சிந்துவுக்கு கிடைத்துள்ளது.

இந்தநிலையில் பல லட்சம் மதிப்பிலான பி.எம்.டபிள்யூ எக்ஸ் 5 கார் ஒன்று சிந்துவுக்கு பரிசாகக் கிடைத்துள்ளது. இந்தியன் பேட்மிண்டன் லீக் உரிமையாளரும், மும்பை மாஸ்டர்ஸின் இணை உரிமையாளருமான சாமுண்டேஸ்வர்நாத் விளையாட்டுத் துறையில் சாதனை படைக்கும் வீரர்களுக்கு கார்களை பரிசளிப்பது வழக்கம்.
அந்த வகையில் சிந்துவுக்கு இந்த காரை அவர் பரிசாக அளித்துள்ளார்.இதற்கான விழா நடிகர் நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் நடைபெற்றது.விழாவில் கலந்துகொண்ட நடிகர் நாகார்ஜுனா, ''சிந்துவின் மிகப்பெரிய தீவிர ரசிகன் நான்.அவர் மேலும் பல சாதனைகளைப் படைக்க வேண்டும்,'' என வாழ்த்தி கார் சாவியை தனது கையால் வழங்கினார்.
சாமுண்டேஸ்வர், சிந்துவுடன் சேர்த்து இதுவரை 22 விளையாட்டு வீரர்களுக்கு இதுபோல காரை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.இதில் சிந்து மட்டுமே நான்கு கார்களை அவரிடமிருந்து பரிசாகப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
