VIDEO: ‘ரத்தன் டாடாவின் காலை தொட்டு ஆசி’.. விருது மேடையை நெகிழ வைத்த இன்போசிஸ் நிறுவனர்..!
முகப்பு > செய்திகள் > வணிகம்ரத்தன் டாடாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தியின் வீடியோ இணையத்தில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

சர்வதேச தொழில் முனைவோருக்கான கூட்டமைப்பின் சார்பில், நாட்டின் முன்னணித் தொழிலதிபர்களில் ஒருவரான ரத்தன் டாடாவிற்கு TIEcon வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இந்த விருதை இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி வழங்கினார். அப்போது அவர் ரத்தன் டாடாவின் காலில் விழுந்து ஆசி பெற்றார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட ரத்தன் டாடா, நாராயமூர்த்தியின் செயல் தன்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டதாகவும், அவரது கையால் இந்த விருதை பெற்றது மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Tags : #RATANTATA #NARAYANAMURTHY
