‘பாடத்தை சரியாக ஒப்பிக்கவில்லை என’.. ‘ஆசிரியர் செய்த நடுங்க வைக்கும் காரியம்’.. ‘10ஆம் வகுப்பு மாணவனுக்கு நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > உலகம்

By Saranya | Sep 06, 2019 09:56 PM

லாகூர் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர் அடித்ததில் 10ஆம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Lahore Teacher beats student to death for not memorising lesson

பாகிஸ்தானின் லாகூரில் இயங்கிவரும் தனியார் பள்ளி ஒன்றில் பிலால் என்ற மாணவர் 10ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று பாடங்களை சரியாக மனப்பாடம் செய்து ஒப்பிக்கவில்லை, வகுப்புக்கு புத்தகம் கொண்டு வரவில்லை எனக் கூறி வகுப்பாசிரியர் பிலாலை கடுமையாகத் தாக்கியுள்ளார். ஆசிரியர் தலையிலும், வயிற்றிலும் கடுமையாகத் தாக்கியதில் மூச்சு விட முடியால் பிலால் சத்தம் போட்டுள்ளார். ஆனால் அப்போதும் விடாத ஆசிரியர் பிலாலின் தலையை வகுப்புச் சுவற்றில் மோதியுள்ளார். இதில் நிலைதடுமாறிய அவர் மயங்கி விழுந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட பிலால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து அவருடைய குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீஸார் சம்பந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்துள்ளனர்.

Tags : #PAKISTAN #LAHORE #SCHOOLSTUDENT #TEACHER #BRUTAL #BEATENTODEATH #SHOCKING