‘இதெல்லாம் வேண்டாமென எவ்வளவு கண்டித்தும்’.. ‘தாய் கேட்காததால்’.. ‘ஆத்திரத்தில் மகன் செய்த நடுங்க வைக்கும் காரியம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Sep 05, 2019 10:22 AM

தர்மபுரி அருகே தாயின் ஆண் நண்பரை கொலை செய்துவிட்டு இளைஞர் தாயைக் கொலை செய்ய முயற்சித்ததோடு தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Youngster brutally murdered mothers boyfriend in Dharmapuri

தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள பாரதிபுரத்தைச் சேர்ந்தவர் ராஜா. அதேபகுதியில் எலெக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வந்த இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் கருத்துவேறுபாட்டால் மனைவியைப் பிரிந்து வசித்து வந்த ராஜாவுக்கு அதே பகுதியில் சத்துணவு அமைப்பாளராக பணியாற்றும் திலகவதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கணவனை இழந்த திலகவதி 2 மகன்களுடன் வசித்து வந்த நிலையில், அவருடைய மூத்த மகன் கவுதமன் இவர்களுடைய பழக்கத்தை கண்டித்துள்ளார். அப்போதும் அவர்கள் அதைக் கேட்காமல் தங்கள் பழக்கத்தை தொடர்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கவுதமன் நேற்று இரவு பாரதிபுரம் அருகே ராஜாவைக் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்துள்ளார். பின்னர் வீட்டுக்குச் சென்ற கவுதமன் திலகவதியையும் கத்தியால் குத்திக் கொலை செய்ய முயற்சித்ததோடு தானும் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார் கவலைக்கிடமான நிலையில் இருந்த தாயையும் மகனையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ராஜாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ள போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : #DHARMAPURI #MOTHER #SON #BOYFRIEND #MURDER #SUICIDE #LOVEAFFAIR