'ஆசையாக மனைவி கொடுத்த உணவை'... 'நம்பி சாப்பிட்ட கணவனுக்கு'... 'கடைசியில் காத்திருந்த பயங்கரம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Sep 04, 2019 05:08 PM

குழந்தைப் பேறு இல்லாததால் ஏற்பட்ட சண்டையில், மனைவி கொடுத்த உணவால், கடைசியில் கணவனுக்கு நடந்த சோக சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

wife try to kill her husband due to family issue arrested

ராமநாதபுரம் மாவட்டம் புதுவலசை தாவுக்காடு பகுதியைச் சேர்ந்த ராமசாமிக்கும், அத்தியூத்து பகுதியைச் சேர்ந்த பஞ்சவர்ணம் என்பவருக்கும், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லாததால், இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கோபமடைந்த, பஞ்சவர்ணம், தனது சகோதரி வீட்டுக்கு போவதும், பின்னர் சமாதானம் அடைந்து திரும்பி வருவதுமாக இருந்துள்ளார். இதனால் ராமசாமியின் தம்பி கணேசன், தனது வீட்டிற்கு அருகில் அவர்களை குடியமர்த்தியுள்ளார்.

அப்போதும் இருவருக்கும் இடையே தகராறு வந்துள்ளது. இந்நிலையில் கோயில் திருவிழாவையொட்டி சொந்த கிராமத்துக்கு, தம்பதி இருவரும் சென்றுள்ளனர். அப்போது திரும்பி வர பஞ்சவர்ணம் மறுத்ததாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கணவர் ராமசாமி, மனைவியை கொல்ல எலி மருந்து வாங்கிவந்து வீட்டில் வைத்தாக கூறப்படுகிறது. இதற்கிடையில் சமாதானம் ஆகி வீட்டுக்கு வந்த பஞ்சவர்ணம், தக்காளி சாதம், முட்டை, ரசம் என சமைத்து, அதில் கணவன் வாங்கி வைத்த எலி மருந்தை கலந்து வைத்துள்ளார்.

இதன்பின் கோபத்தில் இருந்த ராமசாமியை சமாதானப்படுத்தும் வகையில், கொஞ்சிப் பேசி சாப்பிட வருமாறு அழைத்த பஞ்சவர்ணம், அவருக்கு விஷம் கலந்த உணவை ஊட்டியுள்ளார். நீ தான் எனக்குப் பிள்ளை என்று மனைவி கொஞ்சிப் பேசியதை நம்பி, நடக்கப் போகும் விபரீதத்தை அறியாமல் சாப்பிட்டுள்ளார் ராமசாமி. உணவை ஊட்டி விட்ட பின்னர் வெளியே வந்த பஞ்சவர்ணம், அருகில் உள்ள கணேசனின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

அங்கு, கணேசனை சந்தித்த அவர், கணவனுக்கு விஷம் கலந்த உணவை ஊட்டி விட்டதைச் சொல்லி, இன்னும் சற்று நேரத்தில் தங்கள் சகோதரர் இறந்து விடுவார் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த கணேசன், உடனடியாக தனது அண்ணனை மீட்டு, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அங்கு ராமசாமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கணவனை கொல்ல முயன்ற பஞ்சவர்ணத்தை தேவிப்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

Tags : #MURDER #ATTEMPT #RAMANATHAPURAM