"மிஸ்டர் புடின் நீங்க நிஜமா? டூப்பா?" "உங்களுக்கு மொத்தம் எத்தன டூப் இருக்காங்க...?" செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த 'ரஷ்ய' அதிபர்...
முகப்பு > செய்திகள் > உலகம்2000ல் அதிபராக பதவியேற்ற புடின் தான், இப்போதும் பதவியில் இருக்கிறாரா, என்ற கேள்விக்கு ரஷ்ய அதிபர் புடின் பதில் அளித்துள்ளார்.

புடின் குறித்து பல்வேறு சர்ச்சைகள், உலகம் முழுவதும் உலா வருகின்றன. அதில் முக்கியமான ஒன்று 2000ஆம் ஆண்டு பதவியேற்ற புடின் தான் தற்போது இருக்கிறாரா? இல்லை தற்போது இருப்பவர் அவரது டூப்பா? என்பதுதான் அந்த சர்ச்சை கேள்வி. தற்போது அதிபராக இருக்கும் புடின் நிஜமா, டூப்'பா? என, சிலர் சந்தேகம் கிளப்புகின்றனர். அதிபர் புடின், பாதுகாப்பு காரணங்களால் தன்னை போல் உருவ ஒற்றுமை கொண்ட பலரை, 'செட்-அப்' செய்து பொது இடத்தில் உலவ விடுகிறார். உண்மையான புடின் யார் என்பதே குழப்பமாக இருக்கிறது என பல தகவல்கள் வருகின்றன.
இது குறித்து 'டாஸ்' செய்தி நிறுவனத்தினர் அவரிடம் பேட்டி எடுத்தனர்.
நீங்கள் நிஜமான புடினா? ஆள்மாறாட்டம் எதுவும் செய்திருக்கிறீர்களா? என அவர்கள் எழுப்பிய கேள்விக்கு புடின் பதிலளித்துள்ளார். "ஆம்... நான் நிஜமான புடின்தான்... ஆள்மாறாட்டம் எதுவும் இல்லை. என்னை போன்ற உருவ ஒற்றுமை கொண்ட நபர்களை பாதுகாப்பு காரணங்களுக்காக பயன்படுத்தும் யோசனை இருந்தது. ஆனால் அதிகாரிகள் கூறிய யோசனையை நான் நிராகரித்து விட்டேன்" எனக் கூறினார்.
உலகின் இரும்புக் கோட்டை எனக் கருதப்படும ரஷ்யாவில் என்ன நடக்கிறது என்பது பொதுவாக உலக நாடுகளுக்கு தெரிய வருவதே இல்லை. அவ்வளவு ரகசியங்கள் அங்கே புதைந்துள்ளன. அதிபர் புடின் மனம் திறந்து பேட்டியளித்தாலும், அவர் மீதான உலகின் சந்தேகக் கண் தொடர்ந்தபடி தான் உள்ளது.
