‘பிரித்துவிடுவார்கள் என்ற பயத்தில்’... ‘காருக்குள்ளேயே’... ‘இளம் காதலர்களின் கோர முடிவால்’... ‘கதிகலங்கி நிற்கும் பெற்றோர்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 10, 2019 09:59 AM

சேலத்தில் இளம் காதலர்கள், காரிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சயனைட் கலந்த சாக்லெட் சாப்பிட்டு, தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

lovers committed suicide by eat cyanide mixed chocolate in Fear

சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்தவர் வெள்ளிப்பட்டறை அதிபரான கோபி. இவருடைய 22 வயதான மகன் சுரேஷ், தந்தையுடன் சேர்ந்து வெள்ளி தொழில்களை கவனித்து வந்தார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மதியம், வீட்டில் இருந்து கிளம்பிச்சென்ற சுரேஷ், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்நிலையில், இரவு 11 மணியளவில், கோபிக்குச் சொந்தமான கார் ஷெட்டில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் பின் இருக்கையில் சுரேஷூம், அவர் அருகில் ஓர் இளம்பெண்ணும் வாயில் ரத்தமும், நுரையும் வெளியேறியபடி, சடலமாகக் கிடந்ததாகக் கூறப்பட்டது.

இதைக் கண்டு சுரேஷின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து நடந்த விசாரணையில், சுரேஷ் அருகே சடலமாகக் கிடந்த இளம்பெண், சேலம் குகை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த வெள்ளி வியாபாரியான ரவி என்பவருடைய மகள் ஜோதிகா (20) என்பதும், தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்ததும் தெரிய வந்தது.  சுரேஷூம், ஜோதிகாவும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இருவரும் ஒரே சமூகம், ஒரே தொழில் என்றாலும், சுரேஷ் குடும்பத்தினர் வசதி படைத்தவர்கள் எனத் தெரிகிறது.

இதனால், இரு குடும்பத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தாலும், ஜோதிகாவின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இருவரும் பெற்றோருக்கு தெரியாமல் சந்தித்து வந்தநிலையில், தங்களை பிரித்து விடுவார்களோ என்ற அச்சம் இருவரிடமும் இருந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இருவரும் சாக்லெட்டில் சயனைடை கலந்து சாப்பிட்டு, தற்கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். சடலம் கிடந்த காரின் பின்னிருக்கையில் சில சாக்லெட்டுகள் சிதறிக்கிடந்தன. இதையடுத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இவர்களின் முடிவால் தங்களது பிள்ளைகளை இழந்து பெற்றோர் தவித்து வருகின்றனர்.

Tags : #SUICIDE #SALEM #LOVERS