‘சந்தேகத்தில்’.... 'இளம்பெண் எடுத்த விபரீத முடிவு'... 'அதிர்ந்துபோய் நின்ற குடும்பம்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 10, 2019 09:02 AM

வேலைக்கு சேர்ந்த 1 மாதத்தில், பெண் தபால் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

girl committed suicide due to many problems in her life

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வெண்ணாற்றங்கரை பகுதியைச் சேர்ந்தவர்கள் பாலமுருகன்-சுமதி தம்பதியினர். கணவர் பாலமுருகன் 4 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட, சுமதி மன்னார்குடி நகராட்சி அலுவலகத்தில் வேலைப் பார்த்துக்கொண்டு, மகள் பிரீத்தியை (21) தனியாக வளர்த்து வந்தார். கோவையில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படித்து வந்தநிலையில், சமீபத்தில் நடந்த போட்டித்தேர்வில் வெற்றிப்பெற்ற பிரீத்தி, மத்திய அரசின் தபால்துறையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தான் பணி கிடைத்தது.

இதையடுத்து, மன்னார்குடி தாமரைக்குளம் பகுதியில் உள்ள, தனது தாத்தா வீட்டில் தங்கி, எடகீழையூர் கிராமத்தில் தபால் அலுவலகத்தில், போஸ்ட்மேனாக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், கோவைக்கு சென்று கல்லூரி நண்பர்களை சந்தித்துவிட்டு, கடந்த திங்கள்கிழமை அன்று இரவு வீடு திரும்பியுள்ளார் அவர். பின்னர் தாத்தா வீட்டில் திடீரென தனது உடலில் மண்ணெண்யை ஊற்றி தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் அலறித்துடித்த அவரது சத்தத்தை கேட்டு, அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முதற்கட்ட விசாரணையில், பிரீத்தி கல்லூரியில் படித்தபோது அவரை மாணவர் ஒருவர் காதலித்து வந்ததாகவும், பணிக்கு சேர்ந்த பின்னர், அவருடன் பேச நேரம் கிடைக்காததால், நண்பர்கள் மற்றும் காதலனை சந்திக்க பிரீத்தி கோவை சென்றதாகக் கூறப்படுகிறது. 

தனது காதலன் சொன்ன இடத்ததை விட்டுவிட்டு, வேறு இடத்தில் அறை எடுத்து தங்கியதால், சந்தேகத்தில், தன்னை ஏமாற்றி விட்டதாக காதலன் கூறியதால் பிரீத்தி அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால் கடும் விரக்தியில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. மேலும் தங்களது பூர்வீக சொத்தை, தனது தாய் விற்பதற்கு எடுத்த முடிவும், வீட்டில் நடந்து வந்த திருமண ஏற்பாடுகளில் விருப்பம் இல்லாததாலும், இந்த முடிவை அவர் எடுத்திருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர். இதனால் தற்போது அவரது குடும்பம் தவித்து வருகிறது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை என்பது தீர்வு அல்ல என்று மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர்.

Tags : #SUICIDE #YOUNGGIRL #LOVERS