'தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு'... 'அறிவிக்கப்பட்ட விடுமுறை திடீரென நிறுத்திவைப்பு'... விபரங்கள் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Mar 14, 2020 03:09 PM

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கு விடுமுறை என  தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அந்த அறிவிப்பு  தற்பொழுது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

LKG, UKG School Students Leave has been Stopped in ED

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 76-லிருந்து 85 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றைத் தவிர்க்கும் விதமாக தமிழகத்தில் எல்.கே.ஜி, யு.கே.ஜி, வகுப்புகளுக்கு மார்ச் 16 முதல் வரும் மார்ச் 31-ம் தேதி வரை விடுமுறை அளித்து தமிழக பள்ளி கல்வித்துறை நேற்று மாலை உத்தரவிட்டது. மேலும், கேரளாவை ஒட்டிய தமிழக மாவட்டங்களான கன்னியாகுமரி, நெல்லை, கோவை, திருப்பூர், நீலகிரி, தென்காசி, தேனி, திருப்பூர் மாவட்டங்களில் 5 ஆம் வகுப்பு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த உத்தரவை நிறுத்தி வைக்க பள்ளிக் கல்வித்துறை , மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.  நிர்வாக காரணங்களுக்காக இந்த விடுமுறை அறிவிப்பு நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிகல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், கொரோனா வைரஸ் தொற்று, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சுகாதாரத் துறை, தமிழக அரசுடன் கலந்து ஆலோசித்தபிறகு, மீண்டும் அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு தகவல் தெரிவிக்க வேண்டாம் என பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. திங்கட்கிழமையில் இருந்து விடுமுறை என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்றோ, நாளையோ புதிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : #SCHOOLSTUDENT #SCHOOLSTUDENTSTABBED #SCHOOL #LEAVE #விடுமுறை