‘அரை பவுன் மோதிரம்!’.. ‘முதல் மார்க் எடுக்கும் மாணவர்களுக்கு இப்படி ஒரு பரிசா?’.. அசத்தும் அரசுப்பள்ளி!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 09, 2020 03:23 PM

புதுக்கோட்டை அருகே இருக்கிறது பெருமாநாடு அரசு உயர் நிலைப்பள்ளி . உயர் நிலைப்பள்ளியாக உயர்த்தப்பட்டதில் இருந்து 84 மாணவர்கள் 194 மாணவர்களாக பெருகினர். மாணவர்களை ஊக்குவிக்கவும், பள்ளியின் நலனுக்காகவும் தனது சொந்த செலவில் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் மாரிமுத்து அறிவித்துள்ள அறிவிப்புதான் தற்போது வைரலாகியுள்ளது.

Pudukottai School HM gives gold ring for first scorer

ஆம், தன்னுடைய 25 சதவிகித ஊதியத்தை மாணவர்களின் நலன்களுக்காக செலவிடும் இந்த ஆசிரியர், மாணவர்களிடையே ஒரு ஆரோக்கியமான போட்டி உருவாகவும், அவர்களின் உற்சாகம்  மேம்படவும் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவர்களுக்கு அரை பவுன் மோதிரம் வழங்குவதாக அறிவித்திருந்துள்ளார்.

அறிவித்த அடுத்த வருஷமே 2 பேர் முதல் மதிப்பெண் எடுக்க, ஆளுக்கு அரை பவுன் மோதிரத்தை கொடுத்துள்ளார் தலைமை ஆசிரியர்.  இப்படி 5 பேர் முதல் மதிப்பெண் எடுத்தாலும் கொடுப்பேன் என்று கூறும் இந்த தலைமை ஆசிரியர், தன்னால் தன் பள்ளிக்கு சொந்த செலவில் முடிந்ததை செய்வதற்கு ஆசிரியர்களும், அதிகாரிகளும், கிராம மக்களும் ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

Tags : #STUDENTS #TEACHER #SCHOOL