‘லலிதா ஜுவல்லரி கடையில்’... ‘நகைகள் கொள்ளைப்போன’... 'சிசிடிவி காட்சிகள் வெளியீடு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Sangeetha | Oct 03, 2019 05:07 PM

திருச்சியில் லலிதா ஜுவல்லரியில், நகைகளை கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

lalitha jewellery shop robbery cctv footage released

சென்னை சத்திரம் பேருந்துநிலையம் அருகே உள்ளது லலிதா ஜுவல்லரியின் கிளை. இங்கு கடந்த  செவ்வாய்கிழமையன்று கடை மூடியிருந்தநிலையில், நள்ளிரவில் கடையின் பின்னாடி ஏசி மெஷின்கள் அமைக்கப்பட்டிருந்த சுவர் வழியாக, ஓட்டை போட்டு கடைக்குள் குதித்துள்ளனர் முகமூடி அணிந்த மர்மநபர்கள் இருவர். அவர்கள் இருவரும் சேர்ந்து, கடையில் இருந்த தங்கம், வைரம், பிளாட்டினம் என சுமார், 13 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளையிட்டுச் சென்றனர். பேருந்து நிலையத்திற்கு அருகே நடந்த இந்த துணிகர கொள்ளைச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து தனிப்படை அமைத்த காவல்துறையினர், மோப்ப நாய் கொண்டும் சோதனையில் ஈடுப்பட்டனர். போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும்நிலையில், புதுக்கோட்டை புதிய பேருந்துநிலையம் அருகே, சாந்தநாதபுரத்தில் விடுதி ஒன்றில் தங்கியிருந்த, ஜார்கண்டைச் சேர்ந்த 6 பேரிடம், சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில், லலிதா ஜுவல்லரியின் கடையில் மர்மநபர்கள் திருடிய சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

Tags : #LALITHA #JEWELLERY #ROBBERY #CCTV #FOOTAGE