பிரபல லலிதா ஜுவல்லரி கடையின் சுவரை துளையிட்டு நூதன முறையில் கொள்ளை..! பரபரப்பு சம்பவம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 02, 2019 12:13 PM

லலிதா ஜூவல்லரியின் சுவரில் துளையிட்டு கோடிக்கணக்கான நகை கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Jewellery shop looted gold, silver stolen in Trichy

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே லலிதா ஜுவல்லரி கடை அமைந்துள்ளது. இந்த கடையின் பக்கவாட்டு சுவரில் துளையிட்டு கீழ் தளத்தில் இருந்த கோடிக்காணக்கான நகைகளை மர்ம நபர்கள் கொள்ளை அடித்து சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.அதன் மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் இருக்கும் எனவும், அதில் 36 கிலோகிராம் தங்கம் மற்றும் வைர நகைகள் காணமல் போயுள்ளதாவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த கொள்ளை சம்பவத்தில் வடமாநிலத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து பார்த்ததில் முகமூடி போட்டுக்கொண்டு கொள்ளை அடித்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பிரபலமான நகை கடையில் துளையிட்டு கொள்ளை அடித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ROBBERY #TRICHY #JEWELLERY