‘அரை நிர்வாணம், நோட்டமிட 4 பேர், பூட்டை உடைக்க 2 பேர்’.. மிரள வைத்த கொள்ளையர்கள்.. பீதியில் உறைந்த மக்கள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Oct 03, 2019 12:24 PM

தேனியில் நள்ளிரவு வேலையில் அரை நிர்வாணத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட வட மாநில கொள்ளையர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

North indian robbers in Theni caught on CCTV camera

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள அம்மாபட்டி என்ற கிராமத்தில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அரை நிர்வாணத்துடன் நள்ளிரவில் வடமாநில கொள்ளையர்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது விஜயா என்பவரது வீட்டின் பூட்டை உடைக்க முயற்சித்தபோது அவர் கூச்சலிட்டுள்ளார். அதனால் அங்கிருந்து தப்பி மற்றொரு தெருவிற்கு சென்றுள்ளனர்.

அந்த தெருவில் ராமையா என்பவரது வீட்டின் பூட்டை உடைக்கும் போது மக்கள் சத்தம் கேட்டு அங்கிருந்தும் தப்பியுள்ளனர். இந்த சம்பவம் ராஜா என்வரது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதில் அரை நிர்வாணத்துடன் இருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் நோட்டம் விட, இரண்டு நபர்கள் வீட்டின் பூட்டை உடைக்க முயற்சித்தாக விகடன் பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிர்ச்சி அளிக்கும் வகையில் நடந்த கொள்ளை சம்பவத்தால் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.

முன்னதாக தேனி பழனிச்செட்டிபட்டியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவர் நேற்று அதிகாலை திருப்பதி சென்றுவிட்டு வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு நகை மற்றும் பணம் கொள்ளை போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதனை அடுத்து உடனடியாக கொள்ளை சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட முயன்ற மர்ம நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags : #CCTV #ROBBERS #THENI #NORTHINDIAN