'கொரோனா வைரஸிற்கு' எதிராக போராட 'துணிந்து' விட்டோம்... 'தலைமுடியை' வெட்டி கொள்ளும் 'சீன நர்ஸ்'...! 'வைரல் வீடியோ'...

முகப்பு > செய்திகள் > உலகம்

By Suriyaraj | Jan 31, 2020 07:50 AM

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், சீன மருத்துவமனையில் பணிபுரியும் சீன செவிலியர் ஒருவர் தனது தலைமுடியை வெட்டிக் கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

video of a Chinese nurse cutting her hair -viral video

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகை அச்சுறுத்தும் வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்துக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.

இதனிடையே சீனாவில் மருத்துவமானயில் பணி புரியும் செவிலியர் ஒருவர், வைரஸிற்கு எதிரான போராட்டத்தில் பங்கு கொள்ள முடிவு செய்து தனது நீண்ட தலைமுடியை வெட்டிக்கொள்கிறார்.

இதற்காக தனது மருத்துவமனையில் பணி புரியும் சக தோழியிடம் தனது முடியை வெட்டும் படி கூறுகின்றார். இணையத்தில் வைரலாகி வரும் இந்த வீடியோ வைரஸ் பரவலை எதிர்க்க நாங்கள் துணிந்து விட்டோம் என்ற சீனர்களின் உறுதியை எடுத்துக்காட்டுவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

Tags : #CHINA #CORONA #NURSE #CUTTING HER HAIR #WUHAN #VIRAL VIDEO