'போதும்... போதும்... லிஸ்ட் பெருசா போய்க்கிட்டிருக்கு!'... இந்த 'குவாலிட்டீஸ்'லாம் இருக்க பொண்ணு உங்களுக்கு தெரிஞ்சா... இவருக்கு சொல்லுங்கயா பாவம்!... இணையத்தை அதிரவைத்த 'திருமண விளம்பரம்'!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Feb 18, 2020 11:15 AM

இந்தியாவின் மிலிட்டரி பலத்தை வலுப்படுத்தும் வகையில், அதீதமான தேசப் பற்று மிக்க மணப்பெண் வேண்டும் என்ற திருமண விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

matrimonial ad by a man from bihar goes viral on social media

செய்தித்தாள்களில் திருமணத் தகவல்கள் குறித்தான விளம்பரங்கள் வருவது இயல்பானது. அவற்றில் சில, வித்தியாசமாகவும் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்நிலையில், அபினவ் குமார் (வயது 31) என்ற நபர், தன்னுடைய வருங்கால மனைவிக்கான தகுதிகள் பற்றிய விளம்பரம் ஒன்றை செய்தித்தாளில் கொடுத்துள்ளார்.

அவருக்கான மணப்பெண் என்பவர், 'மிகவும் அழகான, மிகவும் நேர்மையான, நம்பத்தகுந்த, அன்பான, அரவணைப்பான, வீரமிக்க, சக்திமிக்க, பணக்கார' பெண்ணாக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அந்த மணப்பெண்ணுக்கு அதீதமான தேசப்பற்று இருக்க வேண்டும் என்றும், இந்தியாவின் மிலிட்டரி மற்றும் விளையாட்டு துறைகளை வலுப்படுத்தும் சிந்தனை கொண்டவராக இருக்க வேண்டும் என்றும், குழந்தை வளர்ப்பில் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்றும் அந்த விளம்பரத்தில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மணப்பெண்ணுக்கான தகுதிகளாக இவற்றைப் பட்டியலிட்டுள்ள அபினவ் குமார், ஒரு பல் மருத்துவர் போல் தெரிகிறது. ஆனால், தற்போது அவர் எந்த வேலையும் செய்யாமல் இருப்பதாக விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags : #MATRIMONY #AD #MARRIAGE