‘அசந்து தூங்கிய தாயின் அலட்சியத்தால்’.. ‘2 வயது குழந்தைக்கு நடந்த பயங்கரம்’..

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Saranya | Nov 14, 2019 12:05 PM

கரூரில் தாய் அசந்து தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் 2 வயது குழந்தை மீன் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்துள்ளது.

Karur Baby Boy Falls Into Fish Tank Dies While Mother Sleeping

திண்டுக்கல் மாவட்டம் உள்ளிக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த தம்பதி சத்யமூர்த்தி - சுகந்தி. இவர்களுடைய 2 வயது குழந்தை ஹரிதேஷ். கரூரில் உள்ள தந்தை வீட்டிற்கு குழந்தை ஹரிதேஷுடன் சென்றிருந்த சுகந்தி நேற்று மதியம் அசந்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறிய குழந்தை எதிர்வீட்டிற்குச் சென்று அங்கு தண்ணீர் தொட்டியில் மீன் நீந்துவதைப் பார்த்துக்கொண்டிருந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக தவறி தண்ணீர் தொட்டிக்குள் விழுந்த குழந்தை மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

பின்னர் தூங்கி எழுந்த சுகந்தி குழந்தையைக் காணாமல் தேடியபோது, எதிர் வீட்டுத் தண்ணீர் தொட்டிக்குள் குழந்தை சடலமாகக் கிடப்பதைப் பார்த்து அதிர்ந்து போயுள்ளார். இதையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கெனவே இறந்துவிட்டதை உறுதி செய்துள்ளனர். குழந்தையை கவனிக்காமல் தூங்கிய தாயின் அலட்சியத்தாலும், தண்ணீர் தொட்டியை பாதுகாப்பாக மூடி வைக்காததாலும் 2 வயது குழந்தை உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #KARUR #DINDIGUL #BABY #BOY #MOTHER #DEAD #FISH #WATER #TANK