'அப்பா இவன் தான் வில்லன்'...'யப்பா டேய் நல்லா வச்சு செஞ்சிட்ட போ'...தெறிக்க விடும் வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Nov 08, 2019 09:13 AM

பிறந்து 20 நாட்களே ஆன குட்டி தம்பி தன்னை கிள்ளி விட்டதாக சிறுவன் ஒருவன் அழும் க்யூட் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

New born brother pinched me boy acts and cries to father funny video

குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் எப்போதுமே தனி ஸ்பெஷல் தான். அவ்வாறு அவர்கள் செய்யும் சின்ன சின்ன சேட்டைகள் அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவுவது உண்டு. அந்த வகையில் தற்போது வைரலாகியுள்ள வீடியோ ஒன்று சிறுவன் செய்யும் சேட்டையின் உச்சம் என்றே கூறலாம்.

வீடியோவில் இருக்கும் சிறுவன் தனது தம்பி கிள்ளி விட்டதாக கூறி, கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் ஊற்ற அழுது கொண்டிருக்கிறான். சரி தம்பி ஏதோ பெரிய ஆளு என நினைத்தால், அவன் கிள்ளியதாக கூறிய தம்பி பிறந்து வெறும் 20 நாட்களே ஆன கை குழந்தை என்பது தான் ஆச்சரியத்தின் உச்சம். காண்போருக்கு சிரிப்பை வரவைக்கும் அந்த சிறுவனின் செயல், அல்டிமேட் க்யூட் என்றே கூறலாம்.

சிறுவன் நிறுத்தாமல் அழுது கொண்டிருந்த நிலையில், அவனை சமாதானம் செய்த அவனது தந்தை இவனா டா உன்னை கிள்ளியது என கேட்டதும், ஆமா எனக்கு வலிக்குது காதுல கிள்ளிவிட்டான் என சிறுவன் கூறுவது நடிப்பின் உச்சம் என்றே கூறலாம். மேலும் அந்த சிறுவனின் தந்தை 'அடே பெயர் வைக்காத குட்டி தம்பி, இப்பவே சேட்டை பண்ணுறியா, இனிமேல் இப்படி சேட்டை பண்ண கூடாது என கூறுவது வேற லெவல் என்றே கூறலாம். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Tags : #FACEBOOK #TWITTER #BABY #JUST BORN BABY #CUTE #VIRAL #PINCHED #FUNNY VIDEO