'சிறுவனின் மூக்கில் சிக்கிய ஜிலேபி மீன்'.. 'கிணற்றில் குளிக்கச் சென்றபோது விபரீதம்'.. பதற வைத்த சம்பவம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Nov 13, 2019 10:48 AM

கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது சிறுவனின் மூக்கில் மீன் குஞ்சு புகுந்ததை அடுத்து, நீண்ட நேரம் போராடி அந்த மீனை மருத்துவர்கள் உயிரோடு வெளியில் எடுத்துள்ளனர்.

Jilebi fish sneaked into boy\'s nose while bathing in well

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே உள்ள மண்ணவேளாம்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் அருள்குமார். அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுவன் தனது நண்பர்களுடன் சேர்ந்து கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளான்.

அப்போது சிறுவனின் மூக்கில் ஏதோ புகுந்துவிட்டது போல உணர்ந்து சிறுவன் வலியில் அலறித் துடித்துள்ளான். இதனையடுத்து அருகில் இருந்துவர்கள் சிறுவனை மீட்டு அன்னவாசல் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.  அங்கிருந்த மருத்துவர் கதிர்வேல், சிறுவனின் மூக்கை பரிசோதித்தார்.

பின்னர் சிரமப்பட்டு மருத்துவம் செய்து, சிறுவனின் மூக்கில் இருந்த ஜிலேபி மீனை உயிரோடு வெளியே எடுத்து சிறுவனையும் மீனையும் காப்பாற்றியுள்ளார்.

Tags : #MINOR BOY #FISH