‘கண் இமைக்கும் நேரத்தில் நடந்த விபத்து’! ‘பறிபோன 2 வயது குழந்தை உயிர்’!.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Selvakumar | Nov 11, 2019 04:50 PM

ஜெயங்கொண்டம் அருகே பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Ariyalur school van accident 2 year old baby died

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள திருக்களப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் ராகுல் (2). தனியார் பள்ளி வேன் ஒன்று அப்பகுதி குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல மணிகண்டனின் வீட்டு முன் நின்றுள்ளது. அப்போது மணிகண்டனின் குழந்தை ராகுல் வேனைப் பார்த்ததும், ஓடிவந்து வேனின் பின்பக்கம் விளையாடியதாக கூறப்படுகிறது.

இதனைக் கவனிக்காத வேன் டிரைவர் வண்டியை பின்னே நகர்த்தியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக குழந்தை வேனின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். இதனை அடுத்து வேன் டிரைவர் காவல்நிலையத்தில் சரணடைந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் வேன் சக்கரத்தில் சிக்கி 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : #ACCIDENT #ARIYALUR #SCHOOLVAN #BABY #DIES