‘அடுக்குமாடி குடியிருப்பில்’... ‘கார் பார்க்கிங்கில் விளையாடிய’... ‘7 வயது சிறுவனுக்கு நிகழ்ந்த கொடூரம்'... பதறவைத்த வீடியோ!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Sangeetha | Nov 13, 2019 06:20 PM

அடுக்குமாடி குடியிருப்பில், கார் நிறுத்துமிடத்தில், சைக்கிளில் விளையாடிய 7 வயது சிறுவனை, அங்கே வசித்து வரும் நபர் ஒருவர், கொடூரமாக தாக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Man beating a 7 year old boy for cycling in a parking lot

தெலுங்கானா மாநிலம் சைபராபாத்தில், ராணி விகாரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று உள்ளது. அங்கு வசித்துவரும் அனில் குமார் என்பவரின் மகன் 7 வயதான ஜெயந்த். இவன் கடந்த 8-ம் தேதி, அடுக்குமாடி குடியிருப்பின் கார் நிறுத்துமிடத்தின் உள்ளேயும், கேட்டுக்கு வெளியேயும் சைக்கிளில் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது, அதே அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் கிராந்தி ஸ்வரூப் என்பவர், தனது காரில் ஒருவருடன், தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

அப்போது அந்த கார் வருவதை அறியாமல், கேட்டின் முன்பு சிறுவன் ஜெயந்த், சைக்கிளில் விளையாடியுள்ளான். இதனால் ஆத்திரமடைந்த கிராந்தி ஸ்வரூப், சிறுவன் என்றும் பாராமல், அவனை கடுமையாக தாக்க ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த சிறுவன், சைக்கிள் வைக்கும் இடத்திற்கு சென்று, சைக்கிளை வைக்க சென்றான். ஆனால் அவனை விடாமல் துரத்திய கிராந்தி ஸ்வரூப், சைக்கிள் வைக்கும் இடத்தில், சிறுவனை 2 தோள்களையும் தூக்கி குலுக்கியதுடன், மிகவும் மோசமாக அடிக்க ஆரம்பித்துள்ளார்.

அதன்பின்னரும் விடாமல், லிப்ட் வரை அடித்துக்கொண்டே சென்ற அவர், சிறுவனின் வீட்டில் கொண்டுபோய்விட்டுவிட்டு, அவனது பாட்டியை மிரட்டிவிட்டு சென்றதாகக் கூறப்படுகிறது. அந்த நேரத்தில் சிறுவனின் பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். பின்னர் வந்து பார்த்தபோது, மகன் காயத்தால் துடித்துக்கொண்டிருந்ததைப் பார்த்ததும், அதிர்ச்சியடைந்துள்ளனர். அடுக்குமாடி குடியிருப்பில், இருந்த சிசிடிவி காட்சிகளை கொண்டு, காவல்நிலையத்தில், பெற்றோர் புகார் அளித்ததை அடுத்து தற்போது இந்த விஷயம் வெளியே வந்துள்ளது.

சிறுவனை கடுமையாக தாக்கியவர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளநிலையில், தலைமறைவான அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் தலைமறைவான கிராந்தி ஸ்வரூப் மற்றும் சிறுவனின் பெற்றோரும் நண்பர்களாக இருந்தும், எதற்காக தனது மகனை அவ்வாறு அடித்தார் என்று தெரியாமல், பெற்றோர் கததிகலங்கி நிற்கின்றனர். இருவரின் மகன்களும் ஒன்றாக விளையாடியநிலையில், அவரது மகனை அனுப்பிவிட்டு, தனது மகனை மட்டும் கொடூரமாக தாக்கியதாக சிறுவனின் பெற்றோர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Tags : #BOY #BEAT